வெளியானது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் கேரக்டர்

ஐதராபாத் : நடிகர் பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பிரபாசின் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் மற்றும் பிரபாசின் கேரக்டர் ஆகியவை வெளிப்படுத்தப்பட்டன.

நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்தப் படம் அவரது கேரியரில் மிகச்சிறந்த படங்களாக அமைந்தன. படத்தில் அவர் மகேந்திர பாகுபலி என்ற அந்த கேரக்டராகவே பார்க்கப்பட்டார். படத்தில் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ராஜமவுலி செதுக்கியிருந்தார்.

பாகுபலி படம்

பாகுபலி படம்

படத்தில் அனுஷ்கா, ராணா மற்றும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் கேரக்டர்களும் மிகவும் கச்சிதமாக பொருந்தின. இதையடுத்து பிரபாசின் மார்க்கெட் இந்திய அளவில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ராதே ஷ்யாம் படம்

ராதே ஷ்யாம் படம்

படத்தில் அவருக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். ஆக்ஷன் படங்களில் நடித்துவந்த பிரபாஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு இத்தகைய காதல் கதையில் பிரபாஸ் நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திய என அனைத்து மொழிகளிலும் வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கலையொட்டி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் பிரபாசின் பிறந்ததினத்தையொட்டி இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசர் வெளியீடு

டீசர் வெளியீடு


மிரட்டலான வகையில் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே டீசர் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் விக்ரமாதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளதும் வெளிப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் ரிலீசையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது.

தொடர் படங்கள்

தொடர் படங்கள்

விரைவில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வருகிறார். அவரது மார்க்கெட் அதிகரித்துள்ள நிலையில் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X