"ஜூம் ஜூம்".. ரசிகர்களை கட்டிப்போட்ட கலர்புல் டான்ஸ்.. தீயாய் பரவும் சல்மான், திஷா பதானியின் சாங்!
மும்பை : பாலிவுட் ஸ்டார் சல்மான் கானின் ராதே படம் வரும் 13ம் தேதி வெளியாகவுள்ளது.
இதுவரை இந்த படத்தின் டைட்டில் சாங் உள்ளிட்ட 3 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ஜூம் ஜூம் பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாகவே 75 லட்சம் வியூசை பெற்றுள்ளது.

சல்மானின் 'ராதே' படம்
பாலிவுட் ஸ்டார் சல்மான் கானின் ராதே படம் வரும் 13ம் தேதி ரிலீசாக தயாராக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர், நடிகைகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும் கொரோனா பரவல் காரணமாக இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்பு
இந்த படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது. சீத்தி மார், தில் தே தியா மற்றும் டைட்டில் சாங் ஆகியவை இதுவரை வெளியிடப்பட்டு ரசிகர்களின் அதிக அளவிலான ஆதரவை பெற்றுள்ளன. சல்மானின் படங்கள் அனைத்துமே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஜூம் ஜூம் பாடல்
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜூம் ஜூம் பாடலில் சல்மான் கான் மற்றும் திஷா பதானி இருவரும் இணைந்து கலக்கல் குத்தாட்டத்தை போட்டுள்ளனர். இந்த பாடலில் பேக்கிரவுண்டும் சிறப்பான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சல்மான் படங்களில் எப்போதும் இடம்பெற்றுவிடும் கலக்கல் குத்தாட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
அதே பின்னணி பாடகர்கள்
இந்த பாடல் பூனாவின் ஆம்பி வாலி சிட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் சீத்தி மார் பாடலுக்கு பின்னணி பாடிய ஆஷ் கிங் மற்றும் லுலியா வந்தூர் இந்த பாடலுக்கும் வாயசைத்துள்ளனர். பாடலுக்கு சீசர் கோன்சால்வ்ஸ் நடன அசைவுகளை அமைத்துள்ளார். இந்த பாடல் வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாக 75 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூசை பெற்றுள்ளது.
சல்மான் இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இந்த பாடலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சல்மான் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நேரத்தில் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து இந்த பாடலை ரசிக்கவும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கவும் அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











