விஜய் படத்தில் நடிக்கும் அம்பிகா, ராதிகா

By Mayura Akilan

விக்ரம் பிரபுவை வைத்து ஏ.எல்விஜய் இயக்கும் புதிய படம் ஒன்றில் மூத்த நடிகைகள் அம்பிகா, ராதிகா நடிக்கின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் சிகரம்தொடு படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளிவர தயாராக இருக்கிறது.

சிகரம் தொடு'வை அடுத்து 'வெள்ளைக்கார துரை' படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இதுவொரு காமெடி படமாம்.

விஜய் – விக்ரம் பிரபு

விஜய் – விக்ரம் பிரபு

இப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு, ஏ.எல்விஜய் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

திருமணத்திற்குப் பின்

திருமணத்திற்குப் பின்

‘சைவம்' படத்திற்கு பின்பும், தனது திருமணத்திற்கு பின்பும் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கப் போகும் படம் இதுவாகும்.

இரண்டு ஹீரோயின்கள்

இரண்டு ஹீரோயின்கள்

இதில் விக்ரம் பிரபுக்கு இரண்டு ஜோடிகளாம் மற்றொரு ஜோடி காவ்யா ஷெட்டி என்கின்றனர்.

படப்பிடிப்பு தொடங்கியது

படப்பிடிப்பு தொடங்கியது

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதில் விக்ரம் பிரபு, பழம்பெரும் நடிகை அம்பிகா, ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அமலாபால்

அமலாபால்

இப்படத்தில் அமலாபால் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் – விஜய் கூட்டணி

ஜி.வி.பிரகாஷ் – விஜய் கூட்டணி

ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து 7-வது படமாக இதில் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X