Radhika Apte: 12 வருடத்திற்கு பின் அம்மாவான ரஜினி பட நடிகை.. இணையத்தில் குவியும் வாழ்த்து!

சென்னை: தமிழில் ரஜினிகாந்துடன் நடித்து மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்ற நடிகை ராதிகா ஆப்தே, 12 ஆண்டுகளுக்கு பின் தாயாகி உள்ளார். நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தைக்கு பால் புகட்டும் போட்டோவை பகிர்ந்து இருந்தார். அவருக்கு பலர் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த 'தோனி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை ராதிகா ஆப்தே. அந்த படத்தில் இவர் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தபடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தோனி படத்தை அடுத்து கார்த்தி நடித்த அழகு ராஜா படத்திலும் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படங்களுக்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

radhika apte benedict taylor first child

ராதிகா ஆப்தே: தமிழில் தலைகாட்டவில்லை என்றால், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான பல மொழித் திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும், இவர் வெட்டிங் டே, கால் டு ஸ்பை ஆகிய ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏராளமான கிளுகிளுப்பான வெப் தொடர்களிலும், முழு நிர்வாணம், அரை நிர்வாணம், படுக்கையறை காட்சி என அனைத்திலும் புகுந்து விளையாடி வரும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

காதல் திருமணம்: சர்வதேச அளவில் மிகவும் பரிட்சயமான இந்திய நடிகையாக இருந்து வரும் ராதிகா அடல்ட் தனது காதலர் பெனடிக் டைலர் என்பவரை 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர், தனது கர்ப்பத்தை அறிவிக்காமல் ரகசியமாக வைத்து இருந்தார். லண்டன் திரைப்பட விழாவிற்கு இவர் வந்த போது தான் இவர் கர்ப்பமாக இருப்பதை காண முடிந்தது. இதைத்தொடர்ந்து பேபி பம்புடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து இருந்தார்.

radhika apte benedict taylor first child

குவியும் வாழ்த்து: இந்நிலையில், தற்போது ராதிகா ஆப்தேவிற்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் செய்துள்ளார். மேலும் அதில், தனக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாகவும் ஒரு வார குழந்தைக்கு பால் புகட்டும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இருப்பினும் தனக்கு பிறந்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை. அந்த போட்டோவை பார்த்த நடிகை ராதிகா ஆப்தேவின் தோழியான சாரா ஆப்சன்ஸ், "எனது சிறந்த பெண்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், ராதிகா ஆப்தே தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X