கமல் வழியில் செல்லும் ரஜினி பட நடிகை!
ராதிகா ஆப்தே உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளார்
மும்பை: நடிகை ராதிகா ஆப்தே உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, தைரியமாக முடிவெடுக்கும் நடிகை.

இவர் தமிழில், ஆள் இன் ஆள் அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்தது வெகுவாக பாராட்டப்பட்டது.
ராதிகா ஆப்தே, மாதவிடாய் காலங்களில் பெண்கள் பேணவேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இப்போது, எல்லோரும் போற்றக்கூடிய மற்றொரு வேலையையும் செய்துள்ளார். இறப்புக்குப் பிறகு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்திற்கு பதிவிட்ட கொடையாளி என்பதற்கான அடையாள அட்டையை ட்விட்டரில் பதிவிட்டு இதை செய்வதற்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆனது என ட்வீட் செய்துள்ளார்.
இதே போல், பல வருடங்களுக்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











