Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாலு நாள் வெளியவே தலை காட்டல.. நிர்வாண வீடியோ லீக் ஆனது குறித்து மனம் திறந்த ராதிகா ஆப்தே!
மும்பை: நிர்வாண வீடியோ லீக் ஆனதும் தனது மனநிலை எப்படி இருந்தது என்றும், தான் என்ன செய்தேன் என்றும் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
நடிகை ராதிகா ஆப்தே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகர்.. முதல் வேலையாக ஊழியர்களுக்கு தடுப்பூசி.. நெகிழும் டோலிவுட்!
அஜய் தேவ்கன் தயாரிப்பில் வெளியான பார்ச்சட் படத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக நடித்து பாலிவுட்டையே பதற வைத்திருந்தார் ராதிகா ஆப்தே.
வேலூர் பொண்ணு
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. கடந்த 2005ம் ஆண்டு இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி படத்தில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் சினிமா உலகிற்குள் நுழைந்தார். 2010ம் ஆண்டு வெளியான ரத்த சரித்திரம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்து பிரபலமானார்.
சூப்பர்ஸ்டார் ஜோடி
2012ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ராதிகா ஆப்தே. தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி 2 என சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து பாராட்டுக்களை அள்ளினார்.
நிர்வாணமாக
கடந்த 2015ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் வெளியான பார்ச்சட் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே. அந்த படத்தில் பெண் ஒருவருடன் உறவு கொள்ளும் காட்சியில் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நடித்து ஒட்டுமொத்த பாலிவுட்டையும் பதற வைத்தார்.
நிர்வாண வீடியோ லீக்
அதுமட்டுமின்றி நடிகை ராதிகா ஆப்தே பிகினி ஏரியாவை ஷேவ் செய்யும் வீடியோ ஒன்றும் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை கிளப்பியது. அந்த நிர்வாண வீடியோ லீக் ஆன பிறகு தனது மனநிலை எப்படி இருந்தது என்றும், தான் என்ன செய்தேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.
4 நாள் வெளியவே வரல
நிர்வாண வீடியோ முதன்முறை லீக் ஆனதும் தங்களின் மனநிலை எப்படி இருந்தது என்கிற கேள்விக்கு பதில் அளித்த நடிகை ராதிகா ஆப்தே, முதல் நாலு நாள் வெளியவே தலை காட்டவில்லை என்றார். மேலும், மீடியாவுக்கு பயந்து அப்படி செய்யவில்லை என்றும், முதலில் என் கார் டிரைவர், வீட்டில் வேலை செய்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என யாராவது அதை பார்த்து இருப்பார்களோ என்கிற அச்சம் தான் மனம் முழுவதும் வாட்டி எடுத்தது என்றார்.
அதுதான் தாங்க முடியல
நிர்வாண வீடியோ லீக் ஆனதை விட அந்த வீடியோவை வைத்து என்னை மோசமாக கேலி செய்ததைத் தான் என்னால் தாங்கவே முடியவில்லை என்றார். ஆனால், இதையெல்லாம் கடந்து விட முடியும் என்கிற நம்பிக்கை இருந்ததால் தான் தொடர்ந்து நடித்து வருகிறேன் என்றும் அந்த பேட்டியில் செம போல்டாக புன்னகையுடனே கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.
ஏகப்பட்ட வெப்சீரிஸ்
சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஓகே கம்ப்யூட்டர் வெப்சீரிஸில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். முன்னதாக நெட்பிளிக்ஸின் சேக்கர்ட் கேம்ஸ், கவுல் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும், சாந்தாராம் எனும் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே.