தண்ணீருக்குள் ஜலகிரீடை... ராதிகா ஆப்தே ஹாட் போட்டோஸ்!
மும்பை : ஹிந்தி,தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறி உள்ளார் ராதிகா ஆப்தே.
தமிழில் கபாலி படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததை தொடர்ந்து சித்திரம் பேசுதடி2 ல் நடித்திருந்தார்.
இணையத்தில் கவர்ச்சியை தாராளம் காட்டி வரும் ராதிகா ஆப்தே, தற்போது படுகவர்ச்சியான உடையில் படுஜோராக போஸ் கொடுத்துள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக
அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் இந்திய அளவில் பெருமளவு மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ராதிகா ஆப்தே நடித்திருக்க இதற்கு முன் பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கபாலி இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைய செய்தது.

"எ கால் டு ஸ்பை"
ஹிந்தியில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திய அந்தாதுன், பாட் மேன்,லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களுக்கு சிறந்த கதாநாயகிக்கான விருதுகளும் இவருக்கு கொடுக்கப்பட்டது. இந்திய அளவில் பல மொழியில் நடித்து வந்த இவர் இப்பொழுது ஆங்கில படங்களிலும் நடித்து வர "எ கால் டு ஸ்பை" சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தது.
Recommended Video

சர்ச்சைக்குரிய படங்களிலும்
கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் சித்திரம் பேசுதடி 2ல் நடித்த ராதிகாவுக்கு இந்த படம் கைகொடுக்கவில்லை எனவே மீண்டும் ஹிந்தியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தரமான படங்களுக்கு இடையில் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற சில சர்ச்சைக்குரிய படங்களிலும் நடித்து வருகிறார்.

தண்ணீருக்குள் கவர்ச்சி
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தண்ணிக்குள் கட்டுக்கடங்காத கவர்ச்சியுடன் சிவப்பு நிற உடையில் தனது மொத்த அழகையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் எகிறி வருகின்றன. மேலும், நிர்வாண வீடியோ லீக் ஆனதால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











