விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கபாலி பட நடிகை!

மும்பை : மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் தமிழில் மெகா ஹிட் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது.

புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு இந்திய அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

இதையடுத்து இந்த திரைப்படம் இப்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட அதில் கதாநாயகியாக கபாலி பட நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வேதாவாக விஜய் சேதுபதி

வேதாவாக விஜய் சேதுபதி

சாக்லேட் பாயாக படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் மாதவன் இப்பொழுது அசர வைக்கும் பல தரமான கதாபாத்திரங்களில் நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் 2017 இல் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தில் விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்தார். இயக்குனர் புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் வேதாவாக விஜய் சேதுபதி நடித்து இருக்க படம் பட்டையை கிளப்பியது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல்

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல்

விஜய் சேதுபதி ரவுடியாகவும் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். இருவருக்கும் சரிசமமாக திரைக்கதை அமைக்கப்பட்டு ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அதேசமயம் மாதவனுக்கும் விஜய் சேதுபதிக்கும் சமமாக கதையிலும் காட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

ஹிருத்திக் ரோஷன்

ஹிருத்திக் ரோஷன்

தமிழில் விக்ரம் வேதாவுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து இந்த திரைப்படம் ஹிந்தியில் உருவாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதலில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு ஆமிர்கானும்,மாதவன் கதாப்பாத்திரத்திற்கு சைப் அலிகானும் நடிக்க இருந்தார்கள். சில காரணங்களால் ஆமிர் கான் இந்த படத்தில் இருந்து விலக இப்பொழுது ஹிருத்திக் ரோஷன் சேதுபதியின் வேதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்தியிலும் இப்படத்தை இயக்குகின்றனர்.

Recommended Video

VIKRAM FIRST LOOK | மொத்தமே FANBOY Moment தான் | Kamal Hassan, Lokesh Kanagaraj
சைப்அலி கானுக்கு ஜோடியாக

சைப்அலி கானுக்கு ஜோடியாக

இந்த நிலையில் தற்போது ஹீரோயின் பற்றிய முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை ராதிகா ஆப்தே இதில் நடிக்க உள்ளார். தமிழில் மாதவனுக்கு ஜோடியாக ஷர்த்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி ஹிந்தியில் சைப் அலி கானுக்கு ஜோடியாகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இதர நடிகர் நடிகைகள் பற்றிய அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X