கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் அழகுராணி ராதிகா

சென்னை: ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. இப்படத்தில் கார்த்தியின் ஜோடி காஜல் அகர்வால்.

ஏறக்குறைய படம் முடிவடையும் நிலையில் உள்ளது. தீபாவளிக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் தோன்றும் கதாநாயகிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.

காஜல் அகர்வால் தான் கதாநாயகி என்ற போதும், சமீபத்தில் பாவனாவின் கதாபாத்திரமும் அவசரமாக கதைக்குள் நுழைக்கப்பட்டது. தற்போது ராதிகா அப்தேயும் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடிக்க உள்ளாராம்.

பாவனா கால்ஷீட்....

பாவனா கால்ஷீட்....

இப்படத்திற்காக முதலில் பாவனாவிடம் 10 நாட்கள் கால்ஷீட் வாங்கி, ஷூட்டிங் நடத்தப்பட்டது.

கௌரவத் தோற்றம்....

கௌரவத் தோற்றம்....

இந்நிலையில் படத்தில் புதிதாக ராதிகா ஆப்தேவும் சேர்க்கப் பட்டுள்ளாராம். கௌரவத் தோற்றத்தில் சிறிது நேரமே அவர் வரப்போகிறார் என்றாலும் படத்தின் முக்கிய கதாபாத்திரம் அவர் என பேசிக் கொள்கிறார்கள்.

ரத்த சரித்திர நாயகி....

ரத்த சரித்திர நாயகி....

சூர்யாவுடன் ரத்தச் சரித்திரம்,அஜ்மலுடன் வெற்றிச் செல்வன் மற்றும் பிரகாஷ் ராஜுடன் டோனி முதலிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது, மீண்டும் கார்த்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் தலை காட்ட இருக்கிறார்.

திருப்பமே இவர் முலம் தான்....

திருப்பமே இவர் முலம் தான்....

அசப்பில் கொஞ்சம் ஐஸ்வர்யா ராயை ஞாபகம் படுத்தும் இந்த அழகி மூலமே கதையில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகுமாம். இவரிடமும் 10 நாள் கால்ஷீட் வாங்கி ஷூட்டிங் நடந்து வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X