நடுரோட்டில் நின்றுகொண்டு உங்கள் பெயர் சொல்லிக் கத்தினால்.. பிரபல நடிகையின் 'செம கடுப்பு' அனுபவம்!

By

சென்னை: லண்டன் தெருக்களில் இப்போது நடந்து சென்றால் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

ACTRESS NEELIMA | இனிமே SERIAL இல்ல சினிமா மட்டும் தான்|LOCKDOWN முடிவு| V-CONNECT| FILMIBEAT TAMIL

தமிழில், டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உட்பட சில படங்களில் நடித்தவர், இந்தி நடிகை ராதிகா ஆப்தே.

பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அதிகம் அறியப்பட்டார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். ஸ்கேர்டு கேம்ஸ், கோல், அஹல்யா ஆகிய வெப்சீரிஸ்களில் நடித்துள்ள இவர், படுக்கை அறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர். எதையும் வெளிப்படையாகப் பேசும் ராதிகா, கடந்த சில மாதங்களுக்கு முன், இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார்.

பெனடிக்ட் டெய்லர்

பெனடிக்ட் டெய்லர்

இவர், லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக இப்போது லண்டனில் இருக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.

கவனிப்பதில்லை

கவனிப்பதில்லை

தனது லண்டன் அனுபவம் பற்றி கூறிய அவர், 'லாக்டவுன் காரணமாக மக்கள் வெப்சீரிஸ்களை அதிகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். லண்டன் தெருக்களில் நான் நடந்து சென்றால் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். என்னைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். இதற்கு முன் லண்டன் வந்தபோது, இப்படி யாரும் என்னை உற்றுக் கவனித்ததில்லை.

நடுரோட்டில்

நடுரோட்டில்

இவ்வளவு காலம் லண்டனில் தங்கி இருப்பதும் இதுதான் முதன்முறை. ரசிகர்கள் என்னை நேரில் சந்திக்கும்போது, உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது என்று சொல்வதையோ பாராட்டுவதையோ வரவேற்கிறேன். ஆனால், நடுரோட்டில் நின்றுகொண்டு உங்கள் பெயரை சொல்லிக் கத்தும்போதும் நீங்கள் ஜாக்கிங் செல்லும்போது உங்கள் கவனத்தைத் திசைத் திருப்பும்போதும் கவலையாகி விடுகிறேன்.

மறுத்துவிட்டேன்

மறுத்துவிட்டேன்

ஒருமுறை நான் விமானத்தில் இருந்தபோது, ஒருவர் என்னருகில் வந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் சோர்வாக இருந்தேன். அதனால் நன்றாக அசந்து தூங்கிவிட்டேன். கண்விழித்து பார்த்த போது, அந்த நபர் மீண்டும் போனை என்னை நோக்கி நீட்டியபோது அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X