நிர்வாண போட்டோ விவகாரம்: பி.ஆர்.ஓ.வை பாராட்டும் ராதிகா ஆப்தே

By Siva

மும்பை: தனது நிர்வாண புகைப்படம் வைரலான போது நடந்த விஷயம் பற்றி தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் ஒரு குறும்படத்திற்காக அப்படி நடித்தபோது எடுத்த புகைப்படம் அது.

அந்த புகைப்படம் குறித்து ராதிகா வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

என் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி வைரலான போது அது பற்றி கருத்து தெரிவிக்கவோ, கோபப்படவோ கூடாது என்று பி.ஆர்.ஓ. பிரபாத் சவுத்ரி தெரிவித்தார். நடப்பவற்றை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்குமாறு அவர் அறிவுரை வழங்கினார். அப்பொழுது தான் அமைதி காக்கும் கலையை கற்றுக் கொண்டேன்.

மரியாதை

மரியாதை

பிரபாத் போன்று அனைவரும் இருக்க மாட்டார்கள். அதனால் தான் நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அமைதியாக இருப்பது எவ்வளவு நல்லது, முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன். தலைப்புச் செய்தியில் வருவது முக்கியம் அல்ல. நம்மை பற்றி நல்ல விஷயங்கள் வருவது தான் முக்கியம்.

குறும்படங்கள்

குறும்படங்கள்

திருமணம் செய்து கொள்ளாதே, பிராந்திய மொழி படங்களில் நடிக்காதே, குறும்படங்களிலோ அல்லது வெப்சீரீஸ்களிலோ நடிக்காதே என்று மக்கள் தெரிவித்தார்கள். அவர்கள் எதை எல்லாம் செய்யக் கூடாது என்றார்களோ அதை எல்லாம் நான் செய்துவிட்டேன். அப்படி செய்ததால் என் சினிமா கெரியர் பாதிக்கப்படவில்லை.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

தற்போது அனைத்தும் மாறிவிட்டது. என்னை தேடி வரும் பல பட வாய்ப்புகளை நான் ஏற்க மறுக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அப்படி செய்திருக்க மாட்டேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. அதனால் என்னை கவரும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ராதிகா ஆப்தே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X