Radhika Apte: கபாலி ஹீரோயினுக்கே இப்படியொரு நிலைமையா? அந்த காரணத்தால் பறிபோன பட வாய்ப்பு!

மும்பை: தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து அசத்திய ராதிகா ஆப்தே பாலிவுட்டில் படு போல்டாக பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

ஆனால், அவருக்கே அந்தவொரு காரணம் காரணமாக பட வாய்ப்பு குறைந்து போனதாக சமீபத்திய பேட்டியில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகி உள்ள மிஸ்ட்ரஸ் அண்டர்கவர் படம் நேரடியாக இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

கபாலி ஹீரோயின்: சஞ்சய் தத், ஷாகித் கபூர் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான வா லைஃப் ஹோ டோ ஹை சி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இந்தியில் பல படங்களில் நடித்து வந்த அவர், மராத்தி, தெலுங்கு மொழிகளில் நடித்த நிலையில், பிரகாஷ் ராஜ் நடித்து இயக்கிய தோனி படத்தின் மூலம் தமிழில் 2012ம் ஆண்டு தமிழில் அறிமுகமானார்.

Radhika Apte reveals she lost a film due to this funny reason

ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் படங்களில் நடித்த ராதிகா ஆப்தே பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். அதன் பிறகு சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்திருந்தார்.

முழு நிர்வாணமாக: போல்டாக இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த ராதிகா ஆப்தே அஜய் தேவ்கன் தயாரிப்பில் வெளியான பார்ச்சட் படத்தில் முழு நிர்வாணமாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து சில விளம்பரங்களிலும் வெப்சீரிஸ்களிலும் ஆபாசத்தை அள்ளி வீசி வந்த நிலையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி பல படங்களை இழந்தார்.

Radhika Apte reveals she lost a film due to this funny reason

ஓடிடி ஹீரோயின்: சேக்ரட் கேம்ஸ், கவுல், ஓகே கம்ப்யூட்டர் என அதன் பின்னர் ஓடிடி ஹீரோயினாகவே மாறிவிட்டார் ராதிகா ஆப்தே. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மிஸ்ட்ரஸ் அண்டர்கவர் படத்தை நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியிட்டு இருக்கிறார் ராதிகா ஆப்தே. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உடல் எடை அதிகரித்ததால் ஒரு படத்தை தவறவிட்டேன் என்றார்.

அந்த காரணத்தால் போன பட வாய்ப்பு: பெரிய மார்பகம் இல்லை என்றும் மூக்கு ரொம்ப பெருசா இருக்கு என சொல்லியும் சில படங்கள் தனது கை விட்டுச் சென்றதாக முன்னர் அறிவித்திருந்த ராதிகா ஆப்தே. இந்த முறை 3 முதல் 4 கிலோ எடை அதிகமாக இருந்த காரணத்தால் ஒரு படம் தன் கையை விட்டுச் சென்று விட்டதாக கூறி ஷாக்கை கூட்டி உள்ளார்.

Radhika Apte reveals she lost a film due to this funny reason

ராதிகா ஆப்தே செம ஸ்லிம்மாக இருப்பவர், அவர் உடல் எடை அதிகரித்ததாக சொல்லி யாருப்பா நீக்கியது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சினிமாவில் ஹீரோயின்களை காட்சிப் பொருளாகவே இன்னமும் பார்க்கின்றனர். அவர்கள் ஷேப் எப்படி இருக்கு என்பது தான் முக்கியம் அவர்களின் டேலன்ட்டை யாரும் பார்ப்பதில்லை என்றும் அந்த பேட்டியில் நடிகை ராதிகா ஆப்தே பளிச்சென பேசி பாலிவுட்டில் அடுத்த சர்ச்சையை பற்ற வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X