என்ன இப்படி சொல்லிட்டாப்ல.. 'அந்த காரணத்துக்காகவே திருமணம் செய்தேன்..' ஷாக் கொடுக்கும் ஹீரோயின்!

By

சென்னை: தான் எதற்காக திருமணம் செய்துகொண்டேன் என்பது பற்றி நடிகை ராதிகா ஆப்தே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

KannaMoochi First Look • Varalakshmi Sarathkumar Debut Direction | Women Power | Filmibeat Tamil

தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே.

கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழில் அதிகம் அறியப்பட்டார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்தியில், த வெயிட்டிங் ரூம், ஷோர் த சிட்டி, பட்லாபூர், ஹராம், லயன், பேட்மேன், அந்தாதுன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ராதிகா ஆப்தே, குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். குறும்படம் ஒன்றையும் இயக்கி உள்ளார்.

ஆணாதிக்கம் உண்மை

ஆணாதிக்கம் உண்மை

வெப் சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். மீ டு விவகாரம் எழுந்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து பேசி இருந்தார் நடிகை ராதிகா. சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பது உண்மைதான் என்றும் குறிப்பிட்டிருந்த ராதிகா, தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இசைக் கலைஞர்

இசைக் கலைஞர்

ராதிகா ஆப்தே, கடந்த 2012 ஆம் ஆண்டு தனது காதலர், பெனடிக்ட் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெனடிக்ட், இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். கொரோனாவுக்கு முன்பு லண்டன் சென்ற நடிகை ராதிகா ஆப்தே, இப்போதும் அங்குதான் இருக்கிறார்.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

இந்நிலையில் இந்தி நடிகர் விக்ராந்த் மாஸேவுடன் நேரலையில் பேசினார். அப்போது அவர் திருமணத்தின் மீது தனக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, லண்டனைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டால், விசா பெறுவது எளிது என்பது தெரியவந்தது. இங்கே எல்லைகள் இருக்கக் கூடாது என நினைக்கிறேன்.

விசாவுக்காக திருமணம்

விசாவுக்காக திருமணம்

எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. விசா பெரிய பிரச்னை என்பதால் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ஒன்றாக வாழ விரும்பினோம். இருந்தாலும் அது நியாயமில்லை என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X