அவங்க பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்தணும்: ராதிகா ஆப்தே ஆவேசம்
Recommended Video

மும்பை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேட்டி அளித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் உள்ளது என்று பிரபல நடிகர்கள், நடிககைள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி அழைப்பவர்களின் பெயரை இதுவரை யாருமே வெளியிடவில்லை.
இந்நிலையில் இது குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியிருப்பதாவது,

பெண்கள்
பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து பல பெண்கள் தானாக முன்வந்து தெரிவிக்கிறார்கள். அவர்களின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஏதாவது செய்ய வேண்டும்.

நடிகர்கள்
நடிகைகள் மட்டும் அல்ல நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. சினிமா துறையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல ஆண்களை எனக்கு தெரியும்.

படம்
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பெயர்களை வெளியே தெரிவிக்க வேண்டும். எதை செய்தாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்றும் சிலர் உள்ளனர். அதையும் மறுக்க முடியாது.

திறமை
திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்கும். பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் பெயரை தெரிவித்தால் நம் கெரியரை நாசமாகிவிடுவார்களோ என்ற பயம் உள்ளது. பெரிய ஆளான அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறினால் மக்கள் நம்புவார்களா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது என்று ராதிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications