»   »  விஷாலை 'கோமாளி' என விமர்சித்த ராதிகா... லைட்டை நாட்டாமை பக்கம் திருப்பிய நெட்டிசன்ஸ்!

விஷாலை 'கோமாளி' என விமர்சித்த ராதிகா... லைட்டை நாட்டாமை பக்கம் திருப்பிய நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷாலை 'கோமாளி' என விமர்சித்த ராதிகா... லைட்டை நாட்டாமை பக்கம் திருப்பிய நெட்டிசன்ஸ்!- வீடியோ

சென்னை : ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடந்த பரபரப்பு, ஒரு அரசியல் திரைப்படத்தில் கூட இடம்பெறாத அளவுக்கு, விறுவிறுப்பான காட்சியாக அமைந்து.

விஷாலின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, மீண்டும் பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டதால் அந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இரவு வரை தொடர்ந்தது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்த நாளிலிருந்தே திரையுலகத்தில் நடக்கும் அரசியல், அரசியலில் நடக்கும் நாடகம் அற்புதமாக அரங்கேறி வருகிறது.

விமர்சனம்

விமர்சனம்

விஷால் இடைத்தேர்தலில் நிற்பதை எதிர்த்து இயக்குநரும், நடிகருமான சேரன் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார். நேரடியாக விமர்சிக்க முடியாத சிலர் மறைமுகமாக விமர்சித்தும் வருகிறார்கள்.

ராதிகா சரத்குமார்

அந்த விதத்தில் விஷாலுக்கு நேரடி எதிரியாக சித்தரிக்கப்பட்டு வரும் நடிசர் சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் நேற்று அவருடைய டுவிட்டரில் 'Bunch Of Jokers', அதாவது 'கோமாளிகளின் கூட்டம்' என ஒரு ட்வீட்டை போட்டிருந்தார்.

மனு தள்ளுபடி செய்தபோது

மனு தள்ளுபடி செய்தபோது

விஷாலின் வேட்பு மனுவில் போலி கையெழுத்து எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்ட செய்திகள் வெளியானபோது இந்த ட்வீட்டை பதிவுசெய்தார் ராதிகா. ஆனால், யாரை அவர் அப்படி குறிப்பிடுகிறார் என்று எந்தப் பெயரையோ எந்தக் கூட்டம் எனவோ நேரடியாக சொல்லாமல் விட்டது அவரையே திருப்பித் தாக்கிவிட்டது.

நாட்டாமை பாவம்

'கோமாளிகளின் கூட்டம்' யாரைக் குறிக்கிறது என அந்தப் பதிவின் கமென்ட்களிலேயே பலரும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பாவம், அந்த கமெண்ட் கருத்துககளில் தேவையே இல்லாமல் சரத்குமார் சிக்கிக் கொண்டதுதான் உச்சம்.

மாப்பிள்ளையவே

வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைய இப்படியா கிண்டல் பண்றது சித்தி..?

ஆளே இல்லாத கடையில்

ஆளே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க பாஸ்..? இவரைதானே சொல்றீங்க அக்கா..?

ஜோக்கர்

தனிமனிதன் மட்டுமே ஒரு கட்சியாகவும் இயங்க முடியும் என நிரூபித்த சரத்குமார் அவர்களை ஜோக்கர் என அழைப்பதே உசிதம்.

அடேங்கப்பா

அடேங்கப்பா.. அப்ப விழுகவேண்டிய அந்த 4 லட்சம் ஓட்டு யாருக்கு விழுகப் போகுதோ..

விஷால் கெத்து தானே

மத்த சமயங்களில் வீர வசனம் பேசிட்டு, தேர்தல் வந்தால் மட்டும் ஓடி ஒளியும் சரத்குமாரை விட விஷால் கெத்து தானே..?

English summary
Actor Vishal nominated in RK Nagar by poll election and later his nomination was declained. Actress Radhika Sarath Kumar has posted a tweet about vishal team, 'Bunch Of Jokers'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil