பாலசந்தர் இயக்கத்தில் நடிக்காதது என் துரதிர்ஷ்டம்.. ராதிகா வருத்தம்!

சென்னை: இயக்குனர் பாலசந்தரின் படத்தில் நடிக்காதது என் துரதிருஷ்டம் என்று ரசிகரின் கேள்விக்கு ராதிகா பதிலளித்துள்ளார்.

1980 மற்றும் 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா சரத்குமார், இவர் உடன் சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்லை எனலாம் அப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் , இந்தி , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பின் பங்களிப்பை அளித்து இருப்பார்.

இவர் தற்போது ட்விட்டரில் தனது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தது அனைவரின் புருவத்தையும் சற்று தூக்க வைத்துள்ளது. பொதுவாகவே ராதிகா மற்றும் சரத் இருவருமே இணையத்தளத்தில் பரபரப்பாக பல செய்திகள் அப்டேட்ஸ் செய்வார்கள். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களும் கிடைக்கும்.

கிழக்கே போகும் ரயில்

கிழக்கே போகும் ரயில்

மறைந்த நடிகர் M.R ராதா அவரின் மகள் ராதிகா சரத்குமார். இவர் முதன் முதலில் பாரதிராஜா இயக்கத்தில் "கிழக்கே போகும் ரயில்" என்ற படத்தில் தான் அறிமுகம் ஆனார். இவர் கிட்ட தட்ட 250 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் அதில் தமிழில் மட்டும் 150 படங்களுக்கு மேலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் சேர்ந்து பணியாற்றாத இயக்குனரே இல்லை என்று சொல்லப்படும் வேளையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு லெஜெண்டரி இயக்குனரின் இயக்கத்தில் இவர் ஒரு படம் கூட நடித்ததில்லையாம். அதை கேட்ட அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

ஆம் அவர் வேறு யாருமில்லை இங்கு நம்முள் பலருக்கும் மிகவும் பிடித்த இயக்குனரும், சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் குருவாகிய இயக்குனர் சிகரம் K. பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் தான் இவர் இன்னும் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இவர்கள் இருவரும் பல முறை சந்தித்தது உண்டு ஆனால் இணைந்து பணியாற்றியது இல்லை.

லெஜெண்டரி இயக்குனர்

லெஜெண்டரி இயக்குனர்

மேடம் நீங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி இயக்குனர்களிடமும் இணைந்து படம் நடித்து விட்டீர்கள் K.பாலச்சந்தர் அவர்களை தவிர. நீங்கள் ஒரு மிகச்சிறந்த நடிகை, இருந்தும் நான் இதில் ஒரு வெற்றிடத்தை உங்களிடம் பார்க்கிறேன். நீங்கள் இந்த லெஜெண்டரி இயக்குனரின் படத்தில் நடிக்க வில்லை. ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க அணுகப்பட்டீர்களா இல்லை அது போன்று ஏதுவும் நடக்கவில்லையா? ஓரிரு வார்த்தைகள் அந்த லெஜெண்டரி இயக்குனரை பற்றி சொல்லுங்கள் என அன்போடு கேட்டுள்ளார் அந்த தீவிர ரசிகன்.

துரதிஷ்டமானது

துரதிஷ்டமானது

இதற்கு ராதிகா நாங்கள் இருவரும் இது பற்றி சில முறை விவாதித்துள்ளோம், அவர் என்னிடமிருந்து மிகச்சிறப்பான ஒன்றை பெறவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்காமல் போய்விட்டது. அது என்னுடைய மிகப்பெரிய இழப்பு தான். அவருடன் இணைத்து படம் நடிக்காமல் போனதற்கு தனது வருத்தத்தை தெரிவித்தார் ராதிகா.

ஜீன்ஸ் நெகட்டிவ்ரோல்

ஜீன்ஸ் நெகட்டிவ்ரோல்

"கிழக்குச் சீமையிலே படம் மூலமா லேடீஸ்கிட்ட உனக்கு ஒரு நல்ல இமேஜ் கெடச்சுது. இப்டி நெகட்டிவ்ரோல் பண்ணி அத கெடுத்துகிட்டயே" னு பாரதிராஜா ராதிகாவ ஜீன்ஸ் படத்துல அந்த ரோல் பண்ணதுக்காக திட்டினாராம். இதை ஒரு தடவை ராதிகாவே பலரிடம் சொன்னதாக தகவல் ரெண்டு கேரக்டரும் சுத்தமா மாறுபட்ட இரு துருவங்கள் மாதிரி. அவ்ளோ பர்பெக்ட்டா வாழ்ந்திருப்பாங்க சென்டிமெண்ட் கேரக்டராகட்டும் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டராகட்டும் அவ்வளவு அழுத்தமா தன்னோட நடிப்பை வெளிப்படுத்தி அந்த கேரக்டராவே தன்னை மாத்திக்கறதுல ராதிகாக்கு நிகர் இங்க யாரும் இல்லைனுதான் சொல்லணும். அதனாலதான் என்னமோ இன்னைக்கு வரைக்கும் ராதிகா சீரியல்களுக்கு மவுசு குறைவில்லை.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

ஒருவேளை பாலச்சந்தர் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றி இருந்தால் நாம் கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த படத்தை பெற்றிருப்போம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இருப்பினும் பாலச்சந்தர் சிஷ்யரான வசந்த் , சரண் இன்னும் பல முன்னணி இயக்குனர்கள் பாலச்சந்தரிடம் இருந்து தான் வந்தார்கள். அவர்கள் படத்தில் ராதிகாவை நாம் பார்த்தது மகிழ்ச்சி தான். குறிப்பாக கேளடி கண்மணி படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மேலும் அவர் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்து மக்களை வசியம் செய்வார் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X