ராதிகா அம்மா இல்ல ஆன்ட்டிதான்.. என் அப்பாவுக்கு செகன்ட் வொய்ப்.. ஒரே போடாக போட்ட நடிகை வரலட்சுமி!

சென்னை: நடிகை வரலட்சுமி ராதிகா தன்னுடைய அம்மா கிடையாது அவர் எனக்கு எப்போதும் ஆன்ட்டிதான் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Varalakshmi Opens up #MeeToo | Varalakshmi Sarathkumar | Neeya 2

நடிகை வரலட்சுமி கடந்த சில நாட்களாய் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் வரலட்சுமி. தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் வரலட்சுமி.

நடிகை குற்றச்சாட்டு

நடிகை குற்றச்சாட்டு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார் வரலட்சுமி. பட வாய்ப்புக்காக தன்னையும் சிலர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். அதற்கான ஆதாரங்களும் இருப்பதாக கூறினார் வரலட்சுமி. அவர் கூறிய இந்த குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகருடன் கிசுகிசு

நடிகருடன் கிசுகிசு

நடிகை வரலட்சுமி நடிகர் விஷாலுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். நடிகர் விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் இடையே காதல் என்றும் பேசப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனிடையே நடிகை வரலட்சுமி, பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

நல்ல அப்பாவாக

நல்ல அப்பாவாக

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமியிடம் ரேயானிடம் நெட்டிசன்கள், சரத்குமாரை அப்பா என்று கூற வெட்கமா இல்லையா என்று கேட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வரலட்சுமி, அவர் ஒரு அப்பாவாக தனது கடமையை சரியாக செய்து வருகிறார். ரேயானுக்கு நல்ல அப்பாவாக இருந்து வருகிறார்.

அதில் தவறு இல்லை

அதில் தவறு இல்லை

ரேயானின் அம்மா என்னுடைய அப்பாவை திருமணம் செய்திருக்கிறார். அதனால் அவரை அப்பா என அழைக்கிறார். ரேயானுக்கு ஒரு தந்தையாக திருமணத்தின் போது எல்லாவற்றையும் செய்தார். ரேயான் அவரை அப்பா என அழைப்பதில் எந்த தவறும் இல்லை.

அம்மா கிடையாது

அம்மா கிடையாது

என்னை நீங்கள் ஏன் ராதிகாவை ஆன்ட்டி என்று அழைக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். அவர் எனது அப்பாவுக்கு இரண்டாவது மனைவி அவ்வளவுதான். எனக்கு அம்மா கிடையாது. எல்லாருக்கும் ஒரு அம்மாதான் இருக்க முடியும். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, நான் அவரை ஆன்ட்டி என்றுதான் அழைப்பேன்.

காட்டமாக கூறிய வரு

காட்டமாக கூறிய வரு

வேலை வெட்டி இல்லாதவர்கள்தான் இதுபோன்ற வேலையை செய்து வருகிறார்கள். வேலை வெட்டி இருந்திருந்தால் இதுபோன்ற வேலையையெல்லாம் செய்யமாட்டார்கள் என காட்டமாக கூறினார் வரலட்சுமி. வரலட்சுமி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து கூறிய போது கூட நடிகை ராதிகா அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X