ஜோதிடரிடம் ரூ.1.25 கோடி பெற்றாரா? கிரைம் பிராஞ்ச் போலீஸில் நேரில் ஆஜராகி பிரபல நடிகை விளக்கம்!

By

பெங்களூரு: ஜோதிடரிடம் ரூ.1.25 கோடி பெற்றதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், கிரைம் பிராஞ்ச் போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார், நடிகை குட்டி ராதிகா.

பெங்களூருவை சேர்ந்தவர் யுவராஜ் சாமி. ஜோதிடரான இவர், வலது சாரி தலைவர்களின் பெயரில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தாகப் புகார் கூறப்பட்டது..

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாயின.

தமிழ் சினிமா

தமிழ் சினிமா

யுவராஜ் வங்கி கணக்கில் இருந்து நடிகை குட்டி ராதிகா, அவரது சகோதரர் ரவிராஜ் வங்கி கணக்கிற்கு ரூ.1.25 கோடி வரை மாற்றப்பட்டு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. நடிகை குட்டி ராதிகா, ஜனநாதன் இயக்கிய இயற்கை மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன் உட்பட சில படங்களில் நடித்தார்.

முன்னாள் முதல்வர்

முன்னாள் முதல்வர்

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஷமிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் யுவராஜ் கொடுத்ததாகக் கூறப்பட்ட பணம் பற்றி நடிகை குட்டி ராதிகா விளக்கம் அளித்தார். அதில், யுவராஜ் சாமி, தனது குடும்ப ஜோதிடர் என்று கூறியிருந்தார்.

உறவினர் மூலம்

உறவினர் மூலம்

அவர் வரலாற்று படத்தைத் தயாரிக்க விரும்பினார் என்றும் அதில் நடிக்க முதல் கட்டமாக ரூ.15 லட்சம் அனுப்பியதாகவும் பிறகு தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் கொடுத்ததாகவும் ரூ1.25 கோடி பெற்றதாகச் சொல்வது தவறு என்று கூறியிருந்தார்.

ஆஜராகி விளக்கம்

ஆஜராகி விளக்கம்

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, குட்டி ராதிகாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி அவர் இன்று காலை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X