நடிகர் சங்க தலைவராகிறார் ராதிகா.. சின்னத்திரை நடிகைகளை நம்பி... களம் குதிக்கிறார்!
சென்னை: நடிகர் சங்கத் தலைவராக நடிகை ராதிகாவைக் கொண்டு வர வேலைகள் தொடங்கி விட்டனவாம். ராதிகாவுக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகைகள் மொத்தமாக களம் இறங்கவுள்ளனராம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் இப்போதே பரபரப்பு பற்றிக்கொண்டது. கடந்தமுறை நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு வந்த விஷால் மற்றும் அவரது குழுவினர் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் புகார் கூறி வருகின்றனர்.

மேலும், நடிகர் சங்க செயலாளராக இருந்துகொண்டே தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் விஷால் ஆனதை அவரை வெற்றி பெற வைத்தவர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. இதனால் தான் கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவளித்த மறைந்த ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர், உதயா, போன்றோர் எல்லாம் இன்று விஷாலுக்கு எதிராக நிற்கின்றனர்.
இந்நிலையில் கட்டிடப்பணி நிறைவடையாததால் மீண்டும் விஷால் அணியினர் போட்டியிட்டு வெற்றி பெற்று கட்டிடப்பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் இம்முறை விஷால் அணியை தோற்கடிக்கப்பதற்காக கோலிவுட் வட்டாரத்தில் பெரிய லாபியே நடக்கிறதாம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டு விஷால் அரசை பகைத்துக்கொண்டதை பெரும்பாலான நடிகர், நடிகைகள் விரும்பவில்லையாம். அதனால் இம்முறை ராதிகாவை தலைவராக்க அனைத்து பணிகளும் தீவிரமாக உள்ளதாம். எஸ்.வி.சேகர் தாம் தலைவர் ஆகலாம் என நினைத்தாராம்.
ஆனால் அவரிடம் பேசிய நடிகர் ஒருவர், ராதிகாவை களத்தில் இறக்கினால் தான் நமக்கு வெற்றி உறுதி என பேசினாராம். இதை ஏற்றுக்கொண்ட எஸ்.வி.சேகர், ராதிகாவை தலைவராக்குவதற்கான பணிகளை தொடங்கி அது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.
நடிகர் சங்கத்துக்கு முதன்முறையாக பெண் ஒருவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் நடிகைகள் குறிப்பாக சங்கத்தில் உறுப்பினராக உள்ள சின்னத்திரை நடிகைகளின் ஆதரவோடு ராதிகா தலைவர் ஆவாராம்.


Click it and Unblock the Notifications











