ஷுட்டிங் போகனும்னு சேனல் சொல்லல.. குஷ்புவின் வாய்ஸ் நோட்டு குறித்து நடிகை ராதிகா விளக்கம்!
சென்னை: சீரியல்களுக்கான ஷுட்டிங்கை மே 5ஆம் தேதி தொடங்க வேண்டும் என டிவி சேனல் கூறியதாக வெளியான குஷ்புவின் வாய்ஸ் நோட்டு குறித்து நடிகை ராதிகா விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

நிறுவனங்கள் மூடல்
கொரோன பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வெளியே சென்று வருகின்றனர்.

நாள்தோறும் படங்கள்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே தமிழ் சினிமாவை பொறுத்தவரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் கையிருப்பு இருந்த சீரியல் எபிசோடுகளை வைத்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஓட்டின டிவி சேனல்கள். இந்நிலையில் அவையும் தீர்ந்ததால் நாள்தோறும் படங்களை போட்டு நேரத்தை நிரப்பி வருகின்றன.

குஷ்பு வாய்ஸ் நோட்
வெளியே செல்ல முடியாததாலும் புதிய நிகழ்ச்சிகள் இல்லாததாலும் தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரங்கள் குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான குஷ்புவின் வாய்ஸ் நோட்டில் மே 5ம் தேதி சீரியல் ஷூட்டிங்குகள் தொடங்கப்பட்டு, மே 11ம் தேதி முதல் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாக வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் வலியுறுத்தி வருவதாக கூறியிருந்தார்.

ராதிகா வாய்ஸ் நோட்
மேலும் இதுகுறித்து ஃபெஃப்சி அமைப்பிடம் இயக்குநர் செல்வமணி உடன் கலந்தாலோசித்த நடிகை குஷ்பு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று நடிகை ராதிகாவின் வாய்ஸ் நோட் வெளியாகியிருக்கிறது. குஷ்புவின் வாய்ஸ் மெஸேஜ்க்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது அந்த வாய்ஸ் மெஸேஜ்.

சேனல் சொல்ல வில்லை
அதில் ராதிகா தான் சேனலிடமும் அமைச்சரிடமும் பேசியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர்களிடம் ஃபீட் பேக் கேட்டு வருகிறேன். குஷ்புவின் வாய்ஸ் நோட்டையும் கேட்டேன். இதில் என்னவென்றால், சேனல் ஷுட்டிங் போக வேண்டும் என்று சொல்லவில்லை. ஷுட்டிங் போக தயாரா இருங்க என்றுதான் கூறியிருக்கிறார்கள். அதை நான் திரும்பவும் ரீகன்ஃபார்ம் செய்து கொண்டேன்.

கோடம்பாக்கம் ஹாட்ஸ்பாட்
ஷுட்டிங் போக வேண்டும் என்று சேனல் சொல்லவில்லை. அரசுதான் அதை சொல்லனும். சென்னையை பொறுத்தவரை நாம் இன்னும் ரெட் ஸோனில்தான் உள்ளோம். அதிலும் முக்கியமாக கோடம்பாக்கம் ஹாட்ஸ்பாட்டில் உள்ளது. அதனால் அங்கு ஆள் நடமாட்டமே பண்ண முடியாதுங்குற நிலைமைல இருக்கோம்.

எல்லாம் மாறட்டும்
அதனால நிச்சயமா அதைப்பத்தி யோசிக்க முடியாது. இதெல்லாம் மாறட்டும்.. மாறுனதுக்கு அப்புறம், எப்படி போகப்போறம் என்ன போகப்போறோம் என்பது குறித்து குஷ்பும் சில ஆலோசனைகள் கூறியிருக்கிறார். செல்வமணிக்கும் வாய்ஸ் நோட் போட்டிருக்கிறேன். ஒரு தருணத்துக்கு தள்ளப்பட்டிருக்கோம், அதுக்கு தகுந்த மாதிரிதான் நாம வேலை செய்ய முடியும்.

மீண்டும் கன்ஃபார்ம்
அதை மனசுல வச்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணிதான் பண்ணனும். முக்கியமா சேனல்ஸ் ஷுட்டிங் போக சொல்லல அவங்க பிரிப்பேரா இருங்கன்னுதான் சொல்லியிருக்காங்க. அதை திரும்பவும் நான் கன்ஃபார்ம் பண்றேன். இவ்வாறு நடிகை ராதிகா தனது வாய்ஸ் நோட்டில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











