சித்தி 2 சீரியல் பாக்க போற சிங்கப் பெண்களே.. உங்க குழந்தைகளுக்கு.. ஆரம்பிச்சுட்டாங்கய்யா அக்கப்போர!
சென்னை: சித்தி 2 சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் நெட்டிசன்கள் இப்போதே அக்கபோரை ஆரம்பித்துவிட்டனர்.
கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் சினிமா நடிகையான ராதிகா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் ரசிர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.
இன்றும் சினிமாவில் பிஸியாக உள்ள நடிகை ராதிகா சிறகுகள் மற்றும் சித்தி ஆகிய சீரியல்களை கடந்த 1999ஆம் ஆண்டு சன் டிவியில் தொடங்கினார். சித்தி சீரியல் 1999 முதல் 2001 வரை ஒளிபரப்பானது.

467 எபிசோடுகள்
இந்த சீரியல் பெரும் ஹிட்டானது. காவேரி என்ற குழந்தைக்கு சித்தியாக நடித்தார் ராதிகா. ராடன் மீடியா தயாரிப்பில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பானது. 467 எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் சீரியல் நிறைவு பெற்றது. சீரியல் நிறைவு பெற்ற போது பல இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்தனர்.

சித்தி 2 சீரியல்
இந்நிலையில் சித்தி 2 சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலும் இசையமைப்பாளர் தீனாவின் இசையில் ஒளிபரப்பான அதே கண்ணின்மணி டைட்டில் பாடலுடன் ஒளிபரப்பாகவுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் டெலிகாஸ்ட் ஆகிறது. இதில் ராதிகா, பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வேதனை
சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் நெட்டிசன்கள் இப்போதே தங்களின் அக்கப்போறை தொடங்கிவிட்டனர். டிவிட்டரில் சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டலடித்து கமென்ட்ஸ்கள் பறக்கின்றன. கடந்த சில நாட்களாய் ராதிகாவின் சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகாமல் இருந்ததால் அவரது ரசிகைகளும் ரசிகர்களும் வேதனையில் இருந்தனர். சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் நெட்டிசன்கள் இப்போதே தங்களின் அக்கப்போறை தொடங்கிவிட்டனர். டிவிட்டரில் சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டலடித்து கமென்ட்ஸ்கள் பறக்கின்றன. கடந்த சில நாட்களாய் ராதிகாவின் சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகாமல் இருந்ததால் அவரது ரசிகைகளும் ரசிகர்களும் வேதனையில் இருந்தனர்.
நிஜம் கேளம்மா
இந்நிலையில் இன்று முதல் ஒளிப்பரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ரசிகர், விருட்சமுனியின் பாடல் வரிகள் இனி, மீண்டும் ஒலிக்கப் போகிறது...கண்ணின் மணி.. கண்ணின் மணி.. நிஜம் கேளம்மா... என்று பதிவிட்டுள்ளார். இந்த ரசிகர் மீண்டும் வருகிறாள் சித்தி. #சித்தி2! இன்று முதல் இரவு 9 மணிக்கு உங்கள் சன் டிவி யில். எனபதிவிட்டுள்ளார்.
சிங்கப்பெண்களே
இந்த ரசிகர் இன்று முதல் கொண்டாட்டம்தான் இதற்கு தானே ஆசைபட்டோம் பால குமாரி காத்திருக்கிறேன் சித்தி2 என பதிவிட்டுள்ளார். #சித்தியின் கொடுமை சிலர் அறிந்தது..
#ராதிகா_சித்தியின் பெருமை பலர் அறிந்தது என்று கூறியுள்ளார் இந்த ரசிகர். சித்தி2 சீரியல் பார்க்க போகும் சிங்க பெண்களே... பத்திரம்... உங்கள் பிள்ளைகளுக்கு சித்தி வராமல் பார்த்து கொள்ளவும்... பொது நலன் கருதி என பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











