அம்மாவை நினைவுபடுத்தும் விதமாகப் பெயர் சூட்டிய ராதிகா மகள்.. என்ன பெயர் வச்சிருக்கார் பாருங்க!
சென்னை: பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் மகள், தனது அம்மாவை நினைவுப்படுத்தும் விதமாக மகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார்.
Recommended Video
பிரபல நடிகை ராதிகா. தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
கலர்ஸ் டீவியில் கோடீஸ்வரி நிகழ்ச்சியை நடத்தி வந்த அவர், 'சித்தி 2' தொடரிலும் நடித்து வருகிறார்.

அபிமன்யூ மிதுன்
இவரது மகள் ரேயான். சினிமாவில் நடிக்காத இவர் ராதிகாவின் ராடன் நிறுவனம் உள்ளிட்ட பிசினஸ்களை கவனித்து வந்தார். இவரும் பெங்களூரைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இருவீட்டினரும் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்றது.
ஆண் குழந்தை
இவர்களுக்கு 2018-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தாரக் எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் ரேயான் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ரேயானுக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.

ராத்யா மிதுன்
இந்தக் குழந்தைக்கு சமீபத்தில் ராத்யா என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த பெயருக்கு ரேயான் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் மகள் ராத்யா மிதுனை அறிமுகப்படுத்துகிறோம். அவள் பெயர் என் அம்மாவின் பெயரிலிருந்து தொடங்குகிறது. அம்மா ராதிகாவைப் போலவே, அவளுக்கு ஆச்சரியமான வாழ்க்கை அமையும் எனத் தெரியும்' என்று கூறியுள்ளார்.

பெருமைப்படுகிறேன்
ரேயான், கடந்த சில மாதங்களுக்கு முன், ராதிகா, சரத்குமார் பற்றி போட்டிருந்த ட்விட் நெகிழ்ச்சி அடைய செய்தது. சூரிய வம்சம் படத்திற்கு பின், ராதிகாவுடன் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் சரத்குமார். இதைப் பார்த்த ரேயான், இந்த படத்தில் உங்களை பார்ப்பது உணர்ச்சிவசப்படுத்தியது, உங்களை கட்டிப்பிடித்து ஐ லவ் யூ சொல்ல நினைத்தேன். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











