இரும்பு மனிதர்...தங்கமான மனசு... காதலுடன் சரத்குமாரை வாழ்த்திய ராதிகா
சென்னை : 1986 ல் சின்ன பூவே மெல்ல பேசு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சரத்குமார். பல படங்களில் வில்லனாக நடித்த சரத்குமார், பிறகு முன்னணி முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.
நடிகர், அரசியல் கட்சி தலைவர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட சரத்குமார், 2001 ல் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். சரத்குமார் இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் பலர் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தங்கமான மனசு
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் காதலுடன் நெகிழ்ச்சியாக தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார் ராதிகா. அதில், இரும்பு மனிதர், தங்கமான மனசு. அவருக்கு கொடுக்க மட்டுமே தெரியும். எங்கள் வாழ்க்கையை வலிமையாக வைத்திருக்கும் எஃகு போன்ற இவரை பெற்ற நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

வார்த்தைகள் இல்லை
அவரை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது ஆழ்மனதில் இருந்து வாழ்த்துகிறேன். வலிமையாக, மகிழ்ச்சியாக, அனைத்தும் எப்போதும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். ஹேப்பி பர்த் டே லவ் என குறிப்பிட்டுள்ளார்.
ராதிகா வெளியிட்ட வீடியோ
அத்துடன் சரத்குமார் குடும்பத்துடன் இருக்கும் ஃபோட்டோக்கள் பலவற்றை ஒன்றாக தொகுத்த வீடியோ ஒன்றையும் ராதிகா வெளியிட்டுள்ளார். ராதிகாவின் இந்த வாழ்த்தை ஏராளமானோர் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video

ரெண்டு பேருமே நடிப்பில் பிஸி
ராதிகா, சித்தி 2 சீரியலில் இருந்து விலகி பிறகு தற்போது தெலுங்கு படங்கள் சிலவற்றில் நடித்து வருகிறார். அரசியலில் பிஸியாக இருந்த சரத்குமார், தற்போது வெப்சீரிஸ் போன்றவற்றில் நடிக்க துவங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











