அச்சச்சோ.. ராதிகா சரத்குமாருக்கு டெங்கு காய்ச்சல்.. இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகையாக இருக்க கூடிய நடிகை ராதிகா சரத்குமார், தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தலவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி இருக்கும்போது, இன்னும் ஐந்து நாட்களில் அவர் முழுவதுமாக குணமாகி வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம், 8 அன்று அவர் முழங்கால் வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், மேலும் அவரது கணவர் சரத்குமார் அவரை கவனித்துக் கொண்டதாகவும், அவரது குடும்பம் தனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்ததாகவும் ராதிகா தனது மகளிர் தின பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுருந்தார். முழங்கால் வலி குணமான பின்னர், படப்பிடிப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

Radhika Sarathkumar Admitted Hospital She Affected By Dengue

அலைச்சல்: சில வாரஙக்ளுக்கு முன்னர் கூட, ஜி.வி. பிரகாஷ் குமார் லண்டனில் நடத்திய இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவியது. அதேபோல் கடந்த ஆண்டு அதாவது, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், பாஜக கூட்டணியில் வேட்பாளராக களமிறங்கினார். இவர் விருது நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் ராதிகா தோல்வியைத் தழுவினார். மேலும், இந்த தேர்தலுக்காக விருது நகர் தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

டெங்கு: தேர்தல் முடிந்த கையோடு, சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்திற்காகவும் ராப்பகலாக வேலை பார்த்தார். இதனாலே இவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கும் என ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி இருக்கும்போது, இன்னும் ஐந்து நாட்களில் அவர் முழுவதுமாக குணமாகி வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ராதிகா சரத்குமார் குணமாகி வரும் தகவல் ரசிகர்களை ஆறுதல் அடையச் செய்துள்ளது. மேலும் பலர் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X