மீனாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ராதிகா.. கஷ்டத்தை போக்கும் நண்பர்கள் கிடைப்பதே வரம் தானே!

சென்னை: கணவர் மறைவால் மனம் வாடி போயிருக்கும் நடிகை மீனாவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து திரையுலக தோழிகள் சந்தோஷக் கடலில் ஆழ்த்தி வருவதை பார்க்கவே பூரிப்பாக உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்

நடிகை மீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி வைத்த கலா மாஸ்டர், மீனாவின் வீட்டிற்கு வந்து வாழ்த்தி சந்தோஷப்படுத்திய நடிகை ஸ்ரீதேவி என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

இந்நிலையில், மீனாவை ரெஸ்டரன்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

46வது பிறந்தநாள்

46வது பிறந்தநாள்

குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே தென்னிந்திய திரையுலகின் செல்லப் பிள்ளையாக மாறியவர் நடிகை மீனா. 1976ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் பிறந்த நடிகை மீனா சமீபத்தில் தனது 46வது பிறந்தநாளை தனது நண்பர்களுடனும் திரையுலக தோழிகளுடனும் கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கணவர் மறைவு

கணவர் மறைவு

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் த்ரிஷ்யம் 2, அண்ணாத்த என இப்பவும் பிசியான நடிகையாக நடித்து வந்த நடிகை மீனாவுக்கு எதிர்பாராதவிதமாக அவரது கணவர் வித்யாசாகர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் மறைவால் வாடி வரும் மீனாவை உற்சாகப்படுத்த அவரது பிறந்தநாளை திரையுலக தோழிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

திரையுலக தோழிகள்

திரையுலக தோழிகள்

மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தி கேட்டதுமே ஓடோடி வந்து கடைசி வரை கூட இருந்தார் நடிகை ரம்பா. மீனா மற்றும் அவரது மகள் நைனிகாவை மகிழ்ச்சியடைய வைக்க ரம்பா, சங்கீதா, சங்கவி உள்ளிட்ட திரையுலக தோழிகள் நடிகை மீனாவின் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று அவருக்கு ஆறுதல் கூறிய நிகழ்வுகள் சமீபத்தில் நடந்தேறியது.

ஸ்ரீதேவி, கலா மாஸ்டர்

ஸ்ரீதேவி, கலா மாஸ்டர்

தனுஷின் தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் கலா மாஸ்டர் உள்ளிட்டோர் மீனாவின் பிறந்தநாளை செம ஹேப்பியாக கொண்டாடிய வீடியோவை நடிகை மீனாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

ராதிகா வைத்த விருந்து

ராதிகா வைத்த விருந்து

இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமாரும் மீனாவை உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. போட்டி பொறாமை நிறைந்த திரையுலகில் இப்படி ஒரு நடிகையை சந்தோஷப்படுத்த இத்தனை பிரபலங்கள் ஒன்று கூடுவதை பார்க்கவே சந்தோஷமாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இப்படியே ஹேப்பியா இருக்கணும்

இப்படியே ஹேப்பியா இருக்கணும்

மீனா எப்பவுமே இப்படியே ஹேப்பியா இருக்கணும் என அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். நடிகை ராதிகாவின் பிறந்தநாள் சமீபத்தில் வந்த போது கூட மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X