கெடுவான் கேடு நினைப்பான்: விஷாலை விளாசிய ராதிகா சரத்குமார்
Recommended Video

சென்னை: கெடுவான் கேடு நினைப்பான் என்று விஷால் பற்றி விமர்சித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விஷால்
தரப்பினருக்கும், சேரன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறயிருப்பதாவது,
தயாரிப்பாளர்கள்
என்ன நடக்கிறது? தயாரிப்பாளர்கள் தான் வேலை தருகிறார்கள். அவர்களை எம்ஜிஆர்
மற்றும் சிவாஜி முதலாளி என்று அழைத்தார்கள். இதை பார்த்து வேதனையாக உள்ளது.
உள் பூசல் காரணமாக மக்கள் மத்தியில் நாம் மதிப்பை இழந்து வருகிறோம் என்று
நடிகர் மோகன் ராமன் ட்வீட்டினார்.
ராதிகா
மோகன் ராமின் ட்வீட்டை பார்த்த ராதிகா கெடுவான் கேடு நினைப்பான் என்று பதில் அளித்துள்ளார்.
காமெடி
பிரச்சனை என்றால் அவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டுமே தவிர பிரஸ்ஸுக்கு
போகக் கூடாது என்று தலைவர் கூறுவது காமெடியாக உள்ளது. எங்கேயோ கேட்ட குரல்.
ஜெகில் அன்ட் ஹைட் போன்று அவருக்கு மரியாதையோ நெறிமுறையோ ஒன்றும் தெரியாது
என்று விஷால் பற்றி ட்வீட்டியுள்ளார் ராதிகா.
விஷால்
உண்மை நிறத்தை ரொம்ப நாள் மறைத்து வைக்க முடியாது என்று விஷால் பற்றி
ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார்.


Click it and Unblock the Notifications











