Don't Miss!
- News
தலைக்கு மேல் தேர்தல் வேலை! ஆட்டம் காணும் அண்ணாமலையின் மெகா திட்டம்! என்ன பின்னணி?
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொன்வண்ணனும் இல்லையாமே.. 'சித்தி 2' தொடரில் நடிகர்கள் அதிரடி மாற்றம்.. நடிகை ராதிகா அறிவிப்பு!
சென்னை: கொரோனா காரணமாக, சித்தி 2 தொடரில் பொன்வண்ணன் உட்பட சில நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
Recommended Video
உலகை மிரட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த முறையும் சான்ஸ் இல்ல.. விக்ரமின் அந்த படத்தில் ஸ்ருதியும் இல்லை.. அக்ஷராவும் இல்லையாம்!

தினசரி சம்பளம்
இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடிவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக லாக்டவுன் பிறப்பட்டதால் கடந்த 4 மாதமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர், பெரும் பணக்கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

சின்னத்திரை படப்பிடிப்பு
சினிமா, சின்னத்திரைப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால் தொழிலாளர்களும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது, அரசு. இதையடுத்து அதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா பயம் காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை.

ராதிகா சரத்குமார்
அதோடு சின்னத்திரை ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து செல்வதிலும் நடிகர், நடிகைகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. சில நடிகர், நடிகைகள் தங்கள் சொந்த ஊர்களில் இருப்பதால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில், சில தொடர்களில் நடிகர்களை மாற்றி படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். சித்தி 2 தொடரிலும் நடிகர்களை மாற்றியுள்ளதாக, நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வேறு நடிகர்கள்
இதுபற்றி ட்விட்டரில் அவர், கூறியிருப்பதாவது: சித்தி 2 தொடரின் படப்பிடிப்பு தொடர்கிறது. உடல் நலப் பிரச்னை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக, வேறு நடிகர்களை மாற்றி நடிக்க வைக்கிறோம். பாதுகாப்பு முக்கியம் என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். விரைவில் சன் டிவியில் 'சித்தி 2 ஒளிபரப்பாகும்' என்று கூறியுள்ளார்.

பொன்வண்ணன்
கூடவே ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் 'சித்தி 2' குடும்பத்தில் சிலர் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக பொன்வண்ணன் இல்லை. இதுபற்றி குறிப்பிட்டுள்ள ரசிகர் ஒருவர், 3 நடிகர்களை மாற்றியுள்ளீர்கள். பாதுகாப்பு முக்கியம்.. தரமான சிறப்பான சம்பவத்துக்குக் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். புதிய டீமும் நல்லாவே இருக்கு. பொன் வண்ணன் சாரை மாத்தினதுதான் வருத்தமா இருக்கு' என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.