பாரதிராஜாவின் பூத உடலை வச்சுக்கிட்டே குடும்பத்தில் பிரச்னையா? கையெடுத்து கும்பிட்டு விலக்கி விட்ட ராதிகா

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் மொத்த தமிழ்நாடும் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தாகிவிட்டது. மொத்த திரையுலகமுமே இணைந்து வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திச் சென்றது. இப்படி இருக்கையில் தேனியில் பாரதிராஜாவுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அவரது குடும்ப உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டதும், அதை உடனே சுதாரித்த நடிகை ராதிகா, வாக்குவாதம் பெரிய பிரச்னையாக மாறவிடாமல் தடுத்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

பாரதிராஜாவின் மறைவுக்கு அவரது வயது மூப்பு, உடல்நிலை என காரணங்கள் சொன்னாலும், கடந்த ஆண்டில் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு பாரதிராஜாவை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது. மொத்த குடும்பமும் இந்த பெருந்துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும், பாரதிராஜா மனதளவில் மொத்தமாகவே உருக்குலைந்து விட்டார் என்று நெருங்கிய வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் வெளியானதாக தகவல்.

Radhika Sarathkumar Defuses Tense Family Moment During Bharathiraja s Final Rites in Theni

இப்படி இருக்கையில் கடந்த 10ஆம் தேதி பாரதிராஜா மறைந்தார். இவரது உடலை எங்கு நல்லடக்கம் செய்வது என்ற கேள்வி பலருக்கும் இருந்த நிலையில், எனது அப்பாவை அவருடைய பண்ணை வீட்டில் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று என்னிடத்தில் கூறி உள்ளார் என்று கூறினார். பாரதிராஜாவின் மகள் அப்படிக் கூறியதுமே, தேனியில் வேலைகள் எல்லாம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மருமகளும் அத்தையும் வாக்குவாதம்: இந்த இறுதிச் சடங்கில் திரையுலகத்தினர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது பாரதிராஜாவின் உடலுக்கு அருகில் மனோஜ் பாரதிராஜாவின் மகள் அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் சென்ற பாரதிராஜாவின் மகள் என்னவோ கூற, சட்டென கோபப்பட்ட மனோஜின் மகள், இருக்கையில் இருந்து எழுந்து நகர்ந்தார்.

Radhika Sarathkumar Defuses Tense Family Moment During Bharathiraja s Final Rites in Theni

சுதாரித்த ராதிகா: இருக்கையில் அமர்ந்த பாரதிராஜாவின் மகள், மனோஜ் மகளின் கைகளைப் பிடிக்க, அதை தட்டிவிட்டுவிட்டு கோபத்தை பாரதிராஜாவின் மகள் மீது காட்டினார் மனோஜ் மகள். இந்த சம்பவத்தை கொஞ்சம் தள்ளி இருந்த நடிகை ராதிகா சரத்குமார் கவனித்துக் கொண்டு இருந்துள்ளார். உடனே அவர்கள் அருகில் சென்ற ராதிகா, பாரதிராஜாவின் மகளிடம் ஏதோ பேசி சமாதானம் செய்ய முயன்றார். மேலும் அவரை நோக்கி, இரண்டு கைகளையும் கூப்பியபடி பேசி, அவர்களுக்கு இடையிலான பிரச்னையை மேலும் வளரவிடாமல் தடுத்துள்ளார்.

நெட்டிசன்கள் பேச்சு: தற்போது இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகளும், குடும்பத்திற்குள் ஒற்றுமை இல்லாத வருத்தமும் பாரதிராஜா மனதில் நீங்காத வருத்தமாக இருக்கும் போலயே என்று கூறி வருகிறார்கள். மேலும் சிலரோ, இதையெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் அந்த மனுஷன் மறைந்துவிட்டார் என்றும் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த பிரச்னையை பெரிதாக வளர விடாமல், ஆரம்பத்திலேயே சுதாரித்து தடுத்த, ராதிகாவையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X