பயணிகளை வைத்து நிஜமாகவே பஸ் ஓட்டிய நடிகை!

By Vignesh Selvaraj

சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'இப்படை வெல்லும்' படத்தில், அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் உதயநிதியின் அம்மாவாக நடித்துள்ள ராதிகா, பஸ் டிரைவராக நடித்துள்ளாராம். இதற்காக, பஸ் ஓட்டி பயிற்சி பெற்ற பிறகு நடித்துள்ளார் ராதிகா சரத்குமார்.

'தூங்கா நகரம்', 'அரிமா நம்பி' ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்குகிறார். டி.இமான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

ஆண்களுக்கு நிகராக பெண்கள்

ஆண்களுக்கு நிகராக பெண்கள்

'இப்படை வெல்லும்' படத்தின் இயக்குநர் கௌரவ், ராதிகா பற்றிக் கூறியதாவது, 'பெண்கள் எல்லாத்துறையிலும் ஆண்களுக்க நிகராக இருக்கிறார்கள். படத்தில் உதயநிதியின் தாய் ஒரு துணிச்சலான பெண். பஸ் டிரைவர். அம்மா கேரக்டருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும், துணிச்சலான பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்தபோது ராதிகா மேடம் நினைவுக்கு வந்தார்.'

டிரைவராக ராதிகா

டிரைவராக ராதிகா

'அவரிடம் சொன்னபோது "நான்கு காட்சிகள் தான் எனக்கு ஷூட்டிங் இருக்கு அதுக்குப்போய் இவ்ளோ ரிஸ்க் எடுக்கணுமா?" என்று மறுத்தார். நான் கதையின் தன்மையை எடுத்துக் கூறி அவரைத் தவிர யாராலும் இதில் நடிக்க முடியாது என்று சொன்ன பிறகு நடிக்கச் சம்மதித்தார். மூன்று நாட்கள் பஸ் ஓட்ட பயிற்சி எடுத்தார். அதன் பிறகு நடித்தார்.'

5 நிமிடம் ஓட்டினார்

5 நிமிடம் ஓட்டினார்

திருவண்ணாமலை பஸ் நிலையத்திலிருந்து பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஊருக்குள் சந்து பொந்தெல்லாம் ஓட்டி பைபாசில் வந்து முடிய வேண்டும். கிட்டதட்ட 5 நிமிடம் ஒரே ஷாட்டில் இந்தக் காட்சி இடம்பெறும். வசனம் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டினார். இதுபோல் இன்னொரு நடிகையால் நடிக்க முடியாது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்' எனக் கூறினார் கௌரவ்.

பஸ் ஓட்டத் தெரியும்

பஸ் ஓட்டத் தெரியும்

இதுகுறித்து ராதிகா கூறியதாவது, 'உங்களால்தான் முடியும் என்று ஒரு இயக்குனர் வந்து நிற்கும்போது எப்படி மறுக்க முடியும். வீட்டில் எல்லோரும் தடுத்தார்கள். அவர்களை மீறி பஸ் ஓட்ட பயிற்சி எடுத்து ஓட்டினேன். இப்போது எனக்கு கூடுதலாக ஒரு தொழில் தெரியும். நிஜ வாழ்க்கையில் இது எனக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்று தெரியவில்லை' என்றார்.

துணிச்சலான பெண்

துணிச்சலான பெண்

நடிகை ராதிகா எப்போதும் துணிச்சலான நடிகை எனப் பெயர் பெற்றவர். படத்தில் நடிப்பதற்காக ரிஸ்க் எடுக்கக் கூடியவர். நடிகைகள் சாதாரண விஷயங்களுக்குக் கூட பயந்து நடுங்குவார்கள் எனும் பேச்சுகளை உடைக்கக் கூடியவர். தனக்கு சவாலான கேரக்டர்களை எடுத்து நடிக்கக்கூடிய ராதிகாவின் நடிப்பு இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X