twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொழும்பு ஹோட்டலில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்

    By Siva
    |

    Recommended Video

    கொழும்பு குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்- வீடியோ

    சென்னை: கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் நடிகை ராதிகா சரத்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

    ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் 3 தேவாலயங்கள், ஸ்டார் ஹோட்டல்கள் உள்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்தவர்களின் புனிதநாளான இன்று தேவாலயங்களில் வழிபாடு நடந்த போது இந்த கொடூரம் நடந்துள்ளது.

    Radhika Sarathkumar escapes unhurt from Colombo bombing

    தலைநகர் கொழும்பில் இருக்கும் கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி தேவாலயம் மற்றும் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியாவில் இருக்கும் புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

    மேலும் மட்டக்களப்பு தேவாலயத்திலும் குண்டு வெடித்துள்ளது. இது தவிர கொழும்பில் உள்ள சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி மற்றும் ஷங்ரிலா ஹோட்டல்களில் குண்டுவெடித்துள்ளது.

    இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    இலங்கையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. கடவுள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நான் தற்போது தான் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து கிளம்பினேன். அங்கும் குண்டு வெடித்துள்ளது. நம்ப முடியவில்லை இது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், ராதிமா நல்ல வேளை நீங்கள் பிழைத்துக் கொண்டது என்று கூறி நிம்மதி அடைந்துள்ளனர்.

    English summary
    Actress Radhika Sarathkumar tweeted that, 'OMG bomb blasts in Sri Lanka, god be with all. I just left Colombo Cinnamongrand hotel and it has been bombed, can’t believe this shocking.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X