ராதிகா சரத்குமார் தயாரிப்பில் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை கதை... பேரன் இயக்கப் போறதா சொன்னாரே...

By

சென்னை: தனது தந்தை எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை கதையை படமாக்க, நடிகை ராதிகா சரத்குமார் முடிவு செய்துள்ளார்.

நாடகத்தில் ஆரம்பித்து அரசியல், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகர் எம்.ஆர்.ராதா.

இவரது பகுத்தறிவு கருத்துக்கள், அந்த கால கட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டன. இவரது நடிப்புத் திறமையை பார்த்து வியந்த பெரியார், அவரை நடிகவேள் என்று அழைத்தார்.

பிரமிக்க வைத்தவர்

பிரமிக்க வைத்தவர்

நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த அவர், வில்லன், காமெடி, குணசித்திர வேடம், நாயகன் என பல்வேறு கேரக்டர்களில் பிரமிக்க வைத்தார். அவரது வாழ்க்கைக் கதையை படமாக்க இருப்பதாக அவரது பேரன், இயக்குன்ர் ஐக் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தாத்தா நடிகவேள்

தாத்தா நடிகவேள்

இவர், ஜீவா நடிப்பில் `சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படத்தை இயக்கியவர். இதுகுறித்து அவர் கூறும்போது, என் தாத்தா நடிகவேள் எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன்.

முழுமனதோடு

முழுமனதோடு

பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை முழுமனதோடு எடுப்பேன் என்று கூறியிருந்தார். அவர், அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமாரும் தன் தந்தை எம்.ஆர்.ராதா வாழ்க்கை கதையை படமாக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை அவர் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X