அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில்..ஒரு புதுவித அனுபவம்... ராதிகா சரத்குமார் பேட்டி!
Recommended Video
சென்னை : சரத்குமார் நடிப்பில் தனா இயக்கத்தில் வரவிருக்கும் திரைப்படம் தான் வானம் கொட்டட்டும். இப்படத்தை பற்றியும் இதில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒரு பேட்டியில் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
ராதிகா சரத்குமார் பல வருடங்களாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டையும் கலக்கி வருபவர். பழம் பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார் மற்றும் பல சீரியல்களை தயாரித்தும் உள்ளார்.

கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் தான் ராதிகா சரத்குமார். தற்போது வரை நடித்து கொண்டு இருக்கிறார். திரையுலகில் பெண்கள் குறைவு, திரைப்பட உலகை ஒரு பெண்மணியாக தனது நடிப்பால் இன்று வரை முன்னணியில் இருக்கிறார் ராதிகா.

பல வருடங்கள் கழித்து தனது கணவர் சரத்குமாருடன் வானம் கொட்டட்டும் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இதற்கு முன் இவர்கள் சூர்யவம்சம் படத்தில் இணைந்து நடித்து அசத்தினர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் இருவரும் நடித்த விதம் அங்கு பேசிக்கொண்டது புதுவித அனுபவமாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து நானும் அவரும், கணவன் மனைவியாக சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராதிகா சரத்குமார் கூறினார்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும், இப்படத்திற்கு மணிரத்னம் திரைக்கதை எழுத, புதுமுக இயக்குனர் தனா இயக்குகிறார். இவர் ஏற்கனவே மணிரத்னத்தின் உதவியாளராக சில படங்களில் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விக்ரம் பிரபு மற்றும் ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஒரு குடும்ப கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











