விரைவில் குருதி ஆட்டம்...ரகசியத்தை போட்டுடைத்த நடிகை!

சென்னை: குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் முடித்த கையோடு அதர்வா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறியுள்ளார் ராதிகா சரத்குமார்.

அதிரடியான ஆக்சன் கதைக்களத்தை மையமாகக்கொண்டு உருவாகிவருகிறது குருதி ஆட்டம் இந்த படத்திற்கான அப்டேட்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் இப்போது நடிகை ராதிகா சரத்குமார் இந்த படத்தில் நடித்துள்ளார். தனது காட்சிகளுக்கு டப்பிங் முடித்த கையுடன் சுவாரசியமான செய்தியை தற்போது பகிர்ந்துள்ளார்.

 இணையும் ஜோடி

இணையும் ஜோடி

குருதி ஆட்டம் படத்தை 8 தோட்டாக்கள் புகழ் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கிவருகிறார். அதர்வா முரளி மற்றும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். அதர்வா முரளி, பிரியா பவானி சங்கருடன் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக இணைகின்றனர். இதன் ஷூட்டிங் ஸ்பார்ட் ஸ்டில்கள் சில நாட்கள் முன்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது.

 ஆக்சன் ஹீரோ

ஆக்சன் ஹீரோ

தனது ஒவ்வொரு படத்திற்காகவும் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையான நடிப்பையும் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமாக கொடுக்கக்கூடிய நடிகர் அதர்வா இப்போது இந்த படத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லவ்வர் பாயாக வலம் வந்த அதர்வா தற்போது ஆக்சனில் இறங்கி கலக்கிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இவரது போன படமான "100" இவருக்கு ஒரு ஆக்சன் ஹீரோ இமேஜை பெற்று தந்திருக்கிறது. இந்நிலையில் குருதி ஆட்டம் இவருக்கு ஆக்ஷனில் அடுத்த ஒரு மைல்கல்லாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கும் அவரது பாடல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருந்துவரும் நிலையில் இவர் இந்த படத்திற்கு இசையமைத்து வருவதால் இந்த படத்திற்கான பாடல்கள் எப்போது வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது ராதிகா சரத்குமாரின் ட்விட் மேலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சுவாரசியமான படம்

சுவாரசியமான படம்

இந்த படத்தில் ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இந்நிலையில் இவரின் ட்விட்டர் பக்கத்தில் தனது டப்பிங் வேலைகளை முடித்த கையோடு ஒரு ட்விடையும் போட்டுள்ளார். அதில் அவர் இந்த படம் ஒரு சுவாரசியமான படம் இதன் வெளியீட்டுக்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குருதியாட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அதற்கு பதில் ட்விட் போட்டு தனது நன்றியை தெரிவித்து இருந்தார். இவரின் போன படமான 8 தோட்டாக்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் களைகட்டும்

விரைவில் களைகட்டும்

இந்நிலையில் இப்போது இருக்கும் சூழலில் தமிழில் மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒவ்வொரு படங்களாக OTTயில் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இந்தப்படமும் OTTயில் வெளியிடப்படுமா இல்லை தியேட்டரில் வெளியிடப்படுமா என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நல்ல படங்கள் சுவாரஸ்யமான திரைக்கதை எப்போதும் தோற்றுப்போவதில்லை. அந்த வகையில் குருதி ஆட்டம் விரைவில் களைகட்டும் என்று நம்புவோம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X