ஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா
Recommended Video

சென்னை: ராதிகா சரத்குமார் போட்ட ட்வீட்டை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலர் சோகமாகிவிட்டனர்.
சின்னத்திரையின் முடிசூடா ராணியாக வலம் வருகிறார் ராதிகா சரத்குமார். எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் அவர் சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு.
வாணி ராணி சீரியலை பார்த்து உருகாதவர்களே இல்லை. இந்நிலையில் தான் ராதிகா ஒரு ட்வீட் போட்டார்.
ராதிகா
வாணி ராணி சீரியல் இன்றுடன் முடிகிறது. நீண்ட நாட்கள் ஓடிய சீரியலின் கடைசி நாள் ஷூட் குறித்து ராதிகா சரத்குமார் ட்வீட் செய்தார். ஊக்குவித்த சன் டிவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கவலை
வாணி ராணி சீரியல் முடிவது குறித்த ராதிகாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அழுவது போன்ற ஸ்மைலியை போட்டு உங்களை மிஸ் பண்ணுவோம் என்று கூறியுள்ளனர்.
வாணி
வாணி ராணி சீரியல் முடிவதை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல ராதிகாவின் மகள் ரயன் மிதுனும் ஃபீல் பண்ணியுள்ளார்.
சந்திரகுமாரி
வாணி ராணி முடிவுக்கு வந்தாலும் சந்திரகுமாரி தொடர் மூலம் வரும் திங்கள் முதல் உங்கள் வீட்டிற்கு வருகிறார் ராதிகா. டிவி சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ராதிகா நடிக்கும் டிவி தொடரை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











