twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதயம் நொறுங்கிவிட்டது… கோபம் வருது… ராதிகா வேதனை !

    |

    சென்னை : குஜராத் மருத்துவமனையில் கொரோனா பாதித்த சிறுவன் சாலையில் படுத்துக்கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கண்களையும் கலங்கவைத்துள்ளது.

    Recommended Video

    மோசமான விளைவுகளை ஏற்படுத்திய கொரோனாவின் Second Wave.. யார் காரணம்?

    மகனுக்கு பெட்இல்லாததால் மகனுடன் தாயும் சாலையில் அமர்ந்து இருக்கிறார்.

    முதல் திருமணத்தை மறைத்த டிவி நடிகை.. குடும்பத்துடன் வந்து தகராறு செய்த துணை இயக்குநர்! முதல் திருமணத்தை மறைத்த டிவி நடிகை.. குடும்பத்துடன் வந்து தகராறு செய்த துணை இயக்குநர்!

    இந்த வீடியோவை பார்த்த நடிகை ராதிகா சரத்குமார், மனமுடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனவேதனையையும், கோபத்தையும் பதிவிட்டுள்ளார்.

    நாளுக்கு நாள் அதிகரிப்பு

    நாளுக்கு நாள் அதிகரிப்பு

    கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவை பெரிய அளவில் பாதித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.3 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த எண்ணிக்கையில் தினமும் புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது இந்தியா.

    சாலையில் படுத்துக்கிடக்கிறார்

    சாலையில் படுத்துக்கிடக்கிறார்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சார்தாபென், மருத்துவமனையில், தனது மகனுக்கு பெட் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தாயும் சாலையில் அமர்ந்து இருக்கிறார். 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் மருத்துவமனையில் அனுமதிப்பார்களாம். அந்த தாய் தன் மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வராததால் அனுமதிக்க மறுத்துவிட்டார்களாம். அந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கள் கலங்க வைத்துள்ளது.

    இதயத்தை நொறுக்குகிறது

    இதயத்தை நொறுக்குகிறது

    இதுகறித்து ராதிகா பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. கோபம் வருகிறது, அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என தெரிவித்து கண்ணீர் தாரை தாரையாக ஓடும் எமோஜியை போஸ்ட் செய்திருக்கிறார்.

    பலர் கண்டனம்

    பலர் கண்டனம்

    ராதிகாவின் ட்வீட்டை பார்த்தவர்கள், மிகவும்,கஷ்டமாக இருக்கிறது. குஜராத் அவர் மாநிலமாச்சே. அங்குமா இந்த அவல நிலை என்று கண்டனத்தை பதிவிட்டுவருகின்றனர். மேலும், சிலர் பெட் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்னங்கடா இது, 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அனுமதிப்போம் என்பது. சுத்த முட்டாள்தனமாக இருக்கே என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    Radhika Sarathkumar Says Heartbreaking
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X