சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் என்ன நடந்தது...வடிவேலுவின் ஜாலி வீடியோவுடன் அப்டேட் தந்த ராதிகா

சென்னை: சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸுடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

வடிவேலுவின் ஜாலி வீடியோவுடன் அப்டேட் தந்த ராதிகா

2005 ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் படம் சந்திரமுகி.இயக்குநர் பி.வாசு இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், வினித் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் மிகப் பெரிய ஹிட் ஆனது.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 தற்போது உருவாகி வருகிறது. சந்திரமுகி 2-வில், ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடிப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

Radhika Sarathkumar shares Chandramukhi 2 shooting spot video with Lawrence and Vadivelu

இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்திரமுகி 2-வின் பூஜை நடைப்பெற்றது. அதில் இயக்குநர் பி.வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரவி மரியா, ராதிகா சரத்குமார் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதோடு சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.தற்போது மைசூரில் நடந்து வந்த சந்திரமுகி 2 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் நிறைவு பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Radhika Sarathkumar shares Chandramukhi 2 shooting spot video with Lawrence and Vadivelu

இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலுவுடன் தான் ஜாலியாக இருக்கும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். அத்துடன் "முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சந்திரமுகி 2 ஷுட்டிங்கின் முதல் கட்ட ஷுட்டிங்கில் ஒன்றும் இல்லை. லாரன்ஸ், வடிவேலுவுடன் அதிகமான எனர்ஜி மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். வடிவேலு நடுவில் அமர்ந்திருக்க லாரன்ஸ் மற்றும் ராதிகா இருபுறமும் அமர்ந்து வடிவேலுவின் கன்னத்தில் செல்லமாக குத்தி விளையாடும் வீடியோ லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X