காஃபி வித் சூர்யா...பிரபல நடிகை பகிர்ந்த வைரல் ஃபோட்டோ
சென்னை : அடுத்தடுத்து பல படங்களில் புக் ஆகி வருகிறார் நடிகை ராதிகா. டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஏவி 43, கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றிலும் நடித்து வரும் ராதிகா, தொடர்ந்து தனது ஷுட்டிங் ஸ்பாட் மற்றும் ஒர்க்அவுட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பகிர்ந்து வருவதால் அவரது போஸ்ட்களை பார்க்கவே தனி கூட்டம் காத்திருக்கு.

சூர்யாவுடன் காஃபி
அப்படி இன்று காலை சூர்யாவுடன் காஃபி குடிக்கும் ஃபோட்டோ ஒன்றை ராதிகா பகிர்ந்துள்ளார். அத்துடன், ஹேன்ட்சம் சூர்யாவுடன் காலை காஃபி, ஒர்க்அவுட் மற்றும் அரட்டை. பெர்ஃபெக்ட் மார்னிங் என ஹார்ட் எமோஜியுடன் கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

செம லொக்கேஷன்
அழகான, அமைதியாக மரங்கள் சூழ்ந்த பகுதியில் சூர்யாவுடன் அமர்ந்து காஃபி குடிப்பது போன்ற ஃபோட்டோவை ராதிகா பதிவிட்டுள்ளார். மேலும் சூர்யாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ஃபோட்டோவையும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலர் இது எந்த படத்தின் ஷுட்டிங், எதற்கும் துணிந்தவனா அல்லது வாடிவாசலா என கேட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு
நடிப்பு, தயாரிப்பு என ரொம்பவே பிஸியாக இருந்து வருகிறார் சூர்யா. சமீபத்தில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் ஆகிய படங்களை தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக சூர்யா அறிவித்தார். 2டி என்டர்டைன் மென்ட் பேனரில் உருவாகும் இந்த 4 படங்களையும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் சூர்யா அறிவித்துள்ளார்.

அருண் விஜய் படத்திலும் ராதிகா
சமீபத்தில் ஹரி மற்றும் அருண் விஜய்யுடன் ஷுட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்திருக்கும் ஃபோட்டோவை பதிவிட்ட ராதிகா, இந்த எனர்ஜிடிக் டீமுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தின் ஷுட்டிங் காரைக்குடியில் நடந்து வருவதாகவும் ராதிகா குறிப்பிட்டிருந்தார்.

இளம் ஹீரோக்களுடன் இணையும் ராதிகா
அருண் விஜய், சிம்பு மட்டுமல்ல சர்னாவந்த் நடிக்கும் படம், அதர்வா முரளி நடிக்கும் படம் பல இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் கமிட் ஆகி வருகிறார் ராதிகா. ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்தாலும், அது பற்றிய தகவல்களை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











