Vadivelu: ரிஸ்க் எடுக்கிறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.. ராதிகாவுடன் வடிவேலு செய்யும் சேட்டை!

சென்னை: இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லக்‌ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சந்திரமுகி 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த நடிகர்களிலேயே சந்திரமுகி 2வில் நடித்து வருவது வடிவேலு மட்டும் தான் என்கின்றனர்.

Radhika Sarathkumar shares Vadivelu funny video at Chandramukhi 2 sets

அடிக்கடி அவருடன் செட்டில் செய்யும் ரகளைகளை நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இந்நிலையில், சற்றுமுன் ராதிகா வெளியிட்ட வடிவேலுவின் செம சேட்டை வீடியோ டிரெண்டாகி வருகிறது.

சந்திரமுகி 2வில் வடிவேலு:

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வடிவேலு செய்த அலப்பறை காரணமாக அந்த படம் அப்படியே டிராப் ஆனது. மேலும், ஷங்கருக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், வடிவேலுவுக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் லைகா தலையிட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்க்காக அந்த பஞ்சாயத்தை சரி செய்த நிலையில், வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படு தோல்வியை சந்தித்தது. நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு வடிவேலு நடிப்பில் மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் வடிவேலு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radhika Sarathkumar shares Vadivelu funny video at Chandramukhi 2 sets

சந்திரமுகியில் டபுள் மீனிங் காமெடி:

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து மெகா ஹிட்டான சந்திரமுகி படத்தின் காமெடிகள் டபுள் மீனிங்கில் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்லாவே க்ளிக் ஆகின.

என்ன ஃபீலிங், காலை உள்ளே இழுத்துக்கோ, காயினை சரியா பார்த்து போடணும், ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கில்லையாம்.. இதுல ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம் என டபுள் மீனிங்கின் எல்லைகே சென்று இருப்பார்கள். ஆனால், ரசிகர்கள் மத்தியில் அந்த காமெடி காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு இடையே அதுபோன்ற டபுள் மீனிங் காட்சிகள் இடம்பெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

ரஸ்க் சாப்பிட்டுக் கொண்டே ரகளை செய்யும் வடிவேலு:

இந்நிலையில், தற்போது சந்திரமுகி 2 படத்தின் செட்டில் இருந்து வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் எடுத்துக் கொண்ட வீடியோவை ராதிகா வெளியிட்டுள்ளார்.

அதில், நடிகர் வடிவேலு ரஸ்க் ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே.. மருதமலை படத்தில் இடம்பெற்ற பிரபலமான ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்கிற வசனத்தை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

மாமன்னன் படத்தில் டெரர் லுக்கில் மிரட்டக் காத்திருக்கும் வடிவேலு, சந்திரமுகி 2 படத்தில் காமெடியில் கலாட்டா செய்வார் என்றே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X