ரவுடி ரங்கம்மா, ராங்கியாக மாறி ஓவர் சீன் போடும் ராதிகா சரத்குமார்
சென்னை: புதுப்படம் ஒன்றில் டானாக நடிக்கிறார் ராதிகா சரத்குமார்.
சரண் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் ஆரவ், காவ்யா தாபர் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். வித்தியாசமான டான் கதை கொண்ட அந்த படத்தில் ஆரவுக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.
இந்த படத்தில் ராதிகா சாதாரண அம்மா இல்லை டான் அம்மா.

ராதிகா சரத்குமார்
பெரம்பூரை மிரட்டும் டானாக நடிக்கிறார் ராதிகா. இதில் விசேஷம் என்னவென்றால் அவர் தனது அப்பா எம்.ஆர். ராதா போன்று பேசி, மேனரிசம் செய்கிறாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே படத்தை உடனே பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

மாஸ்
ராங்கியாக, ரவுடியாக நடிக்கச் சொன்னால் ராதிகா அசத்திவிடுவார். அப்படி இருக்கும்போது டான் கதாபாத்திரம் என்றால் சும்மா தெறிக்கவிடுவார். படத்தின் போஸ்டரில் ராதிகா கெத்தாக நாற்காலியில் அமர்ந்து சுருட்டு பிடிக்கும் ஸ்டைலே தனி. நீங்க கலுக்குங்க ராதிகா.

ஆரவ்
படத்தில் ஆரவும் டானாம். மேலும் ரயில்வே கான்டிராக்டராகவும் நடிக்கிறாராம். அம்மா டான் என்றால் மகனும் டான் தானே. இந்த படத்தில் புது ஆரவை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்கிறார் இயக்குநர் சரண். அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய என் படங்களில் கேங்ஸ்டர் கதையை கையாண்டுள்ளேன். அது சுவாரஸ்யமானது. ஆனால் இந்த டான் படம் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் சரண்.

சரண்
படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் துவங்குகிறது. படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார். சரணின் சகோதரர் கே.வி. குகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இந்த படம் ஆரவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











