60 வயதில் அரை டவுசருடன் ராதிகா சரத்குமார்.. அதுல ரகுமானுக்கு என்னவொரு ஆர்வம் பாருங்க!
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட செம சூப்பரான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரை டவுசரை அணிந்தபடி கடலுக்கு அருகே எடுத்துக் கொண்ட போட்டோவை நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அந்த போட்டோவுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
ராதிகா சரத்குமாரின் இந்த போட்டோவை பார்த்த ரகுமான் ஆர்வத்துடன் கேட்டுள்ள கேள்வி தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராதிகா சரத்குமார்: நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகளான ராதிகா சரத்குமார் 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் 1978ம் ஆண்டு ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகர் பிரதாப் போத்தன், ரிச்சர்ட் ஹார்டி உள்ளிட்டவர்களை திருமணம் செய்து விவாகரத்து செய்த ராதிகா நடிகர் சரத்குமாரை 2001ம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்திய ராதிகா சரத்குமார் சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில், சின்னத்திரையில், சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என தொடர்ந்து சீரியல் லேடி சூப்பர்ஸ்டாராகவே வலம் வருகிறார்.

அரை டவுசரில் ராதிகா: அந்த காலத்தில் இருந்தே போல்டான நடிகையான ராதிகா சீரியல்கள் முழுவதும் சேலை அணிந்து கொண்டு காட்சி தந்த நிலையில், வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள இடத்தில் திடீரென அரை டவுசரில் தற்போது அட்டகாசமான போஸ் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் செம கூலாக போஸ் கொடுத்து தனது ஹாலிடேவை கொண்டாடி வருவதை பார்த்து ஆச்சர்யமடைந்த நடிகர் ரகுமான் கமெண்ட் பக்கத்தில் கேட்டுள்ள கேள்விகள் தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

ரகுமானுக்கு என்ன அவ்ளோ ஆர்வம்: பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தக தேவராக கம்பேக் கொடுத்த ரகுமான் அரை டவுசரில் நடிகை ராதிகா செம கூலாக போஸ் கொடுத்து நிற்கும் போட்டோவை பார்த்த உடனே தனியாக போயிருக்கீங்களா? யாரும் கூட வரலையா? என அடுத்தடுத்த கேள்விகளை கேட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ராதிகா சரத்குமார் தனியாக போஸ் கொடுத்த நிலையில், தனியாவா போயிருக்கீங்கனு ரகுமான் ஏன் இவ்ளோ ஆர்வமாக கேட்கிறார். அப்போ அந்த போட்டோவை யார் எடுத்திருப்பா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சமீபத்தில் ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்த ராதிகா சரத்குமார் அடுத்ததாக சந்திரமுகி 2 படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த படம் ரிலீஸாக உள்ளது.


Click it and Unblock the Notifications











