Thaai Kizhavi Day 3 collection : தாய் கிழவி மூன்று நாளில் இத்தனை கோடி வசூலா?
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் மக்களிடம் இருந்து பாராட்டை குவித்து வருகிறது. ராதிகாவின் நடிப்பை அனைவரும் வெகுவாக பாராட்டி வரும் நிலையில் இப்படத்தின் 3நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கும் திரைப்படம் தாய் கிழவி. இப்படத்தில் ராதிகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தாய்கிழவி: தாய் கிழவியாக பவுனுதாய் என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். 75 வயதிலும் வட்டிக்கு பணத்தை கொடுத்து சம்பாதித்து வருகிறார். பவுனுதாய் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமாவிற்கு சென்று விடுகிறார். வட்டி பணம் கேட்டு தொல்லை கொடுப்பதால் அந்த ஊர் மக்களும், மகன்களை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பதால் 3 மகன்களும் கிழவி எப்போது சாவும் என்கிற எண்ணத்தில் இருக்கின்றனர்.
படத்தின் கதை: அந்த நேரத்தில் தான் நகை வியாபாரி இளவரசு வீட்டிற்கு வந்து, பவுனுதாய் 160 சவரன் தங்க நகை வாங்கி சேர்த்து வைத்து இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்டு ஆச்சரியம் அடையும் மகன் மற்றும் மகள்கள் கோமா நிலையில் மரணப்படுக்கையில் இருக்கும் பவுனுதாயை கடனை வாங்கி மருத்துவமனையில் சேர்ந்து காப்பாற்றுகின்றனர். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பவுனுதாய் நகை இருக்கும் இடத்தை சொன்னாரா? உண்மையில் நகை இருக்கா என்பது தான் 'தாய் கிழவி' படத்தின் மீதி கதை.
மூன்றாம் நாள் வசூல்: வெள்ளிக்கிழமை பிப்ரவரி 27ந் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ₹2.65 கோடி வசூலித்தது. இதையடுத்து இரண்ம் நாள் ₹4.65 கோடி வசூலித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 3வது நாள் வசூல், சாக்னில்க் வலைத்தளத்தில் பகிரப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, ரூ.6 கோடியை வசூலித்து, இந்திய அளவில் ரூ.13.65 கோடியை எட்டி உள்ளது. இனிவரும் நாட்கள் வேலை நாட்களாக இருந்தாலும், புதிய படங்கள் எதுவும் வெளிவராததால் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











