Rajinikanth - நடிகையை பார்த்து பயந்த ரஜினிகாந்த்.. உச்சத்தில் இருந்தாலும் அவர் ஒரு குழந்தைதான் போல
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகர் ரஜினிகாந்த் நடிகையை பார்த்து பயந்து நடுங்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார்கள். சமீபகாலமாக அந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக கூறி ஒரு பஞ்சாயத்து கிளம்பியது. ஆனால் ஜெயிலர் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டர் மூலம்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர்.

ரஜினிகாந்த்: நடத்துநராக இருந்து அந்த வேலையை உதறிவிட்டு நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பிறகு நடிகராக அறிமுகமானார் ரஜினி. ஆரம்பகாலத்தில் ரொம்பவே விமர்சனங்களையும், உருவ கேலியையும் சந்தித்தார். குறிப்பாக ஓவர் வேகமாக இருக்கிறார்; கண் சரியில்லை; நிறம் இல்லை; தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று விமர்சித்தனர். ஆனால் எதையெல்லாம் அவருக்கு எதிராக பேசினார்களோ அதெல்லாம்தான் அவருக்கு ப்ளஸ்ஸாக மாறின.
எளிமை: ரஜினிகாந்த் அடிப்படையில் பயங்கரமாக கஷ்டப்பட்டதால் இப்போதுவரை அவர் எளிமையாகவே இருப்பார். அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் பிறரிடம் பழகுவது; ஒரு படம் நன்றாக இருந்தாலும் அந்த படத்தின் இயக்குநரையோ ஹீரோவையோ அழைத்து பாராட்டுவது என்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். அவரின் அந்த குணத்துக்கும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
நடிகைகளுடன்: நடிகர்கள் மட்டுமின்றி நடிகைகளுடனும் நன்றாக பழகி அவர்களுக்கு மதிப்பு கொடுக்கக்கூடியவர். சமீபத்தில்கூட மீனாவுக்கு தனியார் ஊடகம் ஒன்று நிகழ்ச்சி நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டாப் நடிகர்களில் ரஜினி மட்டுமே ஒருவர். அதனை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்ற நடிகைகளும் குறிப்பிட்டு பாராட்டினர். மேலும் தங்களுக்கு அவர் எப்போதுமே நல்ல ரெஸ்பான்ஸ் கொடுப்பார் என்றும் உடன் பணியாற்றியவர்கள் சொல்லியதுண்டு.

பயந்த ரஜினிகாந்த்: இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ராதிகா பேசியிருக்கும் விஷயம் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் பேசுகையில், "ஒருமுறை நான் ரஜினிகாந்த்தை சந்தித்தேன். அந்த சமயம் அவர் ஒரு ரப்பர் செருப்பை அணிந்திருந்தார். நான் உடனே அவரிடம் நீங்கள் சூப்பர் ஸ்டார்தானே என்ன இப்படி ரப்பர் செருப்பு போட்டிருக்கிறீர்கள் என்றேன். அன்றிலிருந்து என்னை பார்த்தவுடன் பயந்துபோய் தன்னுடைய காலில் என்ன அணிந்திருக்கிறோம் என்பதைதான் முதலில் கவனிப்பார்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் உச்சத்துக்கு சென்றாலும் தலைவர் ஒரு குழந்தைதான் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











