1500 ரூபாய் டிக்கெட் விலை.. தாய் கிழவி சக்சஸ் மீட்டில் பெரிய நடிகர்களை விளாசிய ராதிகா
சென்னை: அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, ராதிகா மையக் கதாபாத்திரமாக நடித்து வெளியான படம் தாய் கிழவி. படம் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளியானது. படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. படம் இன்னும் திரையரங்குகளில் சக்சஸ்ஃபுல்லா ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ராதிகா பெரிய நடிகர்களை அட்டாக் செய்துள்ளார்.
ராதிகா பேசுகையில், " என்னிடம் சிலர் என்னங்க உங்க படம் 50 கோடியோ, 60 கோடியோ தான் வசூலித்துள்ளது. அதுக்கு எதுக்கு சக்சஸ் மீட் என்று கேட்டார்கள். எங்கள் படத்தின் டிக்கெட் விலை ரூபாய் 150, இந்த 150 ரூபாய் டிக்கெட் விலையிலேயே எங்கள் படம் இந்த அளவுக்கு வசூலித்துள்ளது. பெரிய கதாநாயகர்களின் படங்கள் வரும்போது அதன் டிக்கெட் விலை ரூபாய் 1500 மற்றும் ரூபாய் 2000 என விலையை உயர்த்தி இந்த வசூலை நாங்கள் அடையவில்லை.

விளாசல்: பெண்களுக்கான படத்தை பெண்கள் சிரமம் இல்லாமல் வந்து படம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 150 டிக்கெட் விலை என்று நிர்ணயம் செய்து தாய் கிழவி படம் இந்த வசூலை எட்டி உள்ளது. அப்படியான வெற்றியை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். அதுதான் உண்மையான வெற்றி" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், திரைத்துறைக்குள் இருந்து கொண்டே, பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறித்தும், அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறித்தும் ராதிகா சுட்டிக் காட்டியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

எமோஷனல்: அதேபோல் சிவகார்த்திகேயன் பேசுகையில், "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படம் முடிந்ததும், கார்த்திக் வேணுகோபால் என்று போடும்போது எல்லோரும் கைதட்டினார்கள். அப்போது அவரது அப்பா கார்த்திக் வேணுகோபாலைக் கட்டிப் பிடித்தார். அதேபோல் தாய்கிழவி படத்தின் பிரீமியர் ஷோ முடிந்ததும், எல்லோரும் கைதட்டினார்கள். அப்போது சிவக்குமாரின் அப்பா எங்கள் இருவரையும் கட்டிப் பிடித்தார். எனது அப்பா இறக்கவில்லை என்று எனக்கு அப்போது தோன்றியது. இது போன்ற அன்பு தான் எனக்கு நிறைவைக் கொடுக்கிறது" என்று பேசினார். இவ்வாறு பேசுகையில் சிவகார்த்திகேயன் அழுதுவிட்டார்.


Click it and Unblock the Notifications











