இன்டர்நெட் சைகோஸ்.. குழந்தைய பத்தி பேசுற.. இதையும் வச்சுக்க.. குஷ்புக்கு ஆதரவாய் குதித்த கோடிஸ்வரி!

Recommended Video

Khushbu fight with Netizen Twitter : நெட்டிசன் ஒருவரை பன்னி என திட்டிய குஷ்பு-வீடியோ

சென்னை: குஷ்புவின் மகளை கிண்டல் செய்தவரை நடிகை ராதிகாவும் தனது ஸ்டைலில் கெட்ட வார்த்தையால் திட்டி வெளுத்து வாங்கியிருக்கிறார்.

குஷ்பு தனது மகள் அனந்திதாவுடன் தீபாவளி கொண்டாடிய போட்டோவை தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் குஷ்புவையும் அவரது மகளையும் பாராட்டினர்.

குஷ்பு தனது மகள்களை பேபி டால் என்று கூறியதையும் நெட்டிசன்கள் வெகுவாக ரசித்தனர். என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு தாய் என்பதை நிரூபித்து விட்டீர்கள் என டிவிட்டி வந்தனர்.

குஷ்பு பதிலடி

குஷ்பு பதிலடி

ஆனால் ஒரு நெட்டிசன் மட்டும் குஷ்புவின் மகளை கெட்ட வார்த்தையால் விமர்சித்திருந்தார். இதனை பார்த்து ஆத்திரம் கொண்ட குஷ்பு, அந்த நபரை பதிலுக்கு திட்டி டிவிட்டியிருந்தார்.

இன்டர்நெட் சைகோ

இன்டர்நெட் சைகோ

குஷ்புவின் பதிலடி டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் சபாஷ், சரியான பதிலடி கொடுத்தீர்கள் என புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் குஷ்புவின் டிவிட்டை பார்த்த நடிகை ராதிகா, தகாத கமென்ட்ஸை போடுபவர்களை இன்டர்நெட் சைகோ என குறிப்பிட்டுள்ளார்.

தன் பங்குக்கு..

மேலும் குழந்தையை பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என தனது பங்குக்கு கூடுதலாக சில கெட்ட வார்த்தைகளை சேர்த்துவிட்டுள்ளார்.

ராதிகாவுக்கு நன்றி

ராதிகாவின் இந்த டிவிட்டை பார்த்த குஷ்பு, மச் லவ் ராட்ஸ் என தனது நன்றியையும் அன்பையும் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X