Varalaxmi Wedding: பாரதிராஜா முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை.. ரம்யா கிருஷ்ணனை ஒரு பிடி பிடித்த ராதிகா!

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் ஜூலை 2ம் தேதி நடைபெற்ற நிலையில் ஜூலை 3ம் தேதி மாலை சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் அதில் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வருகின்றன. வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் தம்பதியினரை பலரும் வாழ்த்தி உள்ளனர்.

Varalaxmi Sarathkumar Radhika Sarathkumar AR Rahman Bharathiraja Ramya Krishnan

பாரதிராஜா, ஏ.ஆர். ரஹ்மான், விஜய் ஆண்டனி, ரோஜா, விஜயகுமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியானது.

பார்த்து பார்த்து கவனித்த ராதிகா: சரத்குமாரின் மூத்த மனைவி சாயாதேவியின் மகளான வரலட்சுமி சரத்குமார் திருமணத்தை தனது சொந்த மகள் திருமணம் போலவே நடிகை ராதிகா நடத்தியுள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அத்தனை பிரபலங்களையும் வாசலுக்கு சென்று வரவேற்பது முதல் கவனித்துக் கொள்வது என ராதிகா பம்பரம் போல சுழன்ற காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

Varalaxmi Sarathkumar Radhika Sarathkumar AR Rahman Bharathiraja Ramya Krishnan

பாரதிராஜா முதல் ஏ.ஆர் ரஹ்மான் வரை: 82 வயதாகும் பாரதிராஜா தொடர்ந்து அனைத்து சினிமா நிகழ்ச்சிகளிலும் சினிமா பிரபலங்களில் சுக துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார். பாரதிராஜா வரலட்சுமி ரிசப்ஷனுக்கு வருகை தந்ததும் ஓடோடி சென்ற ராதிகா அவரை கட்டிப்பிடித்து வரவேற்றார். ஏ.ஆர். ரஹ்மான், விஜய் ஆண்டனி, தமன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வரலட்சுமியின் ரிசப்ஷனில் பங்கேற்றனர்.

Varalaxmi Sarathkumar Radhika Sarathkumar AR Rahman Bharathiraja Ramya Krishnan

ரம்யா கிருஷ்ணனை ஒரு பிடி: ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன் என ராதிகாவின் தோழிகள் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்தனர். மேடையில் ரம்யா கிருஷ்ணனை பார்த்ததும் அவரை ஒரு பிடி பிடித்து ராதிகா கொஞ்சிய காட்சிகள் தற்போது டிரெண்டாகி வருகின்றன. முன்னதாக வரலட்சுமி சரத்குமார் சங்கீத் நிகழ்ச்சியில் சரத்குமாருடன் சேர்ந்து ராதிகா ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

Varalaxmi Sarathkumar Radhika Sarathkumar AR Rahman Bharathiraja Ramya Krishnan

விஜயகுமார் முதல் வடிவுக்கரசி வரை: தென்னிந்திய திரைபிரபலங்களான பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சுரேஷ் கோபி, ஷோபனா உள்ளிட்ட பலர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Varalaxmi Sarathkumar Radhika Sarathkumar AR Rahman Bharathiraja Ramya Krishnan

மேலும், விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், வடிவுக்கரசி, ஜாக்கி ஷெராஃப், அருண் பாண்டியன், பிரபுதேவா உள்ளிட்ட பலர் லீலா பேலஸில் நடைபெற்ற திருமண ரிசப்ஷனில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X