பாக்யராஜ் இறுதி ஊர்வலத்தில் ராதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டு.. எவ்வளவுதான் பொறுத்துப் போவாங்க?

சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மறைவையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், நடிகை ராதிகாவின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

பாக்யராஜின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட நாளிலிருந்தே, யூடியூப் சேனல்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஊடகத்தினர் அதிக அளவில் திரண்டிருந்தனர். அதேபோல், திரைப்பிரபலங்களை நேரில் பார்க்க ரசிகர்களும் பெருமளவில் கூடியதால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது.

கையெடுத்து கும்பிட்ட ராதிகா: அந்த சூழலில், மிகுந்த மனவேதனையுடன் இருந்த நடிகை ராதிகா, ஊடகத்தினரையும் யூடியூப் சேனல்களைச் சேர்ந்தவர்களையும் பார்த்து, "உங்களுக்கு டி.ஆர்.பி. வேண்டும் என்றால் நாங்கள் நடித்துக் கொடுக்கிறோம். ஆனால் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை தயவு செய்து கெடுக்காதீர்கள்" என்று கையெடுத்து கும்பிட்டபடி வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் பரவி பலரது கவனத்தை ஈர்த்தது.

இறுதி ஊர்வலத்திலும் தொடர்ந்த நெரிசல்: ஆனால் ராதிகாவின் வேண்டுகோளுக்குப் பிறகும் சூழலில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இறுதி ஊர்வலத்தின் போதும், கேமராக்களும் கூட்ட நெரிசலும் தொடர்ந்ததால், பிரபலங்கள் நடந்து செல்லக்கூட சிரமப்படும் நிலை ஏற்பட்டது.

விரக்தியில் எடுத்த நடவடிக்கை: இதனால் வேதனையின் உச்சத்தில் இருந்த ராதிகா, தனக்கு அருகில் நின்று கொண்டிருந்தவர்களை கைகளால் விலக்கி, இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்ல பாதையை உருவாக்கிக் கொண்டார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Radhika Wins Praise for Her Emotional Gesture at K Bhagyaraj s Funeral Procession Amid Huge Crowd

ராதிகாவுக்கு ஆதரவாக ரசிகர்கள்: இந்த வீடியோவை பார்த்த பலரும் ராதிகாவின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "நெருங்கியவரை இழந்த துயரத்தில் கூட அமைதியாக வழியனுப்ப முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டால் யாருக்குத்தான் கோபம் வராது?", "இது கோபம் அல்ல, வேதனையின் வெளிப்பாடு", "இறுதி அஞ்சலியிலாவது தனிப்பட்ட இடத்தை மதிக்க வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பாக்யராஜின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படும் நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்த இந்த சம்பவம், துயர நிகழ்வுகளில் தனியுரிமையையும், மரியாதையையும் காக்க வேண்டிய அவசியம் குறித்து மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X