Thaai Kizhavi :பவுனுதாயாக ஜெயித்த ராதிகா.. தாய் கிழவி மொத்த வசூல் விவரம்!
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி திரைப்படம் பிப்ரவரி 27ந் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று, நல்ல வசூலை அள்ளியது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
ராதிகா நடித்த 'தாய் கிழவி படத்திற்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் மேக்கப்பட்டு, பவுனுதாய் கதாபாத்திரமாகவே வாழ்த்து இருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்த பலரும் பாராட்டினார்கள். படம் பிப்ரவரி 27ந் தேதி வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் வெளியான இப்படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில் சிங்கம் புலி, பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, அருள்தாஸ், ஜார்ஜ் மரியன், முத்துகுமார், ரேச்சல் ரெபேக்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

தாய் கிழவி: ராதிகா இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் 75 வயது கிழவியாக பவுனுதாய் என்கிற ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் பெண்கள் அடுத்தவர்களின் தயவில், அடுத்தவர்களை நம்பி இருக்கக்கூடாது. தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதை பெண்களுக்கு ஒரு பாடமாக சொல்லப்பட்டுள்ளது. இதனால், அந்த படத்தை இல்லத்தரசிகள் வெகுவாக கொண்டாடினார்கள். இந்த படம் முதல் நாளில் மட்டும் ₹2.65 கோடி வசூலித்தது. அதன் பின் மக்களிடம் இருந்த வந்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்து 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.13.65 கோடி வசூலை எட்டி உள்ளது.
படத்தின் மொத்த வசூல்: இதைத்தொடர்ந்து 10 நாட்களில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்றோடு படம் வெளியாகி 16 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் இப்படம் இதுவரை எவ்வளவு வசூலை பெற்றுள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வெளியாகி 16 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 51.07 கோடி வசூலித்துள்ளது. மேலும், இந்த படத்தின் OTT உரிமையை JioHotstar பெற்றுள்ளதால், மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இந்த படம் ஜியோஹாட் ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தியேட்டரில் தரவிட்டவர்கள் ஓடிடியில் படத்தை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











