»   »  தனுஷின் அம்மாவாகிறார் ராதிகா... அப்ப, அப்பா?

தனுஷின் அம்மாவாகிறார் ராதிகா... அப்ப, அப்பா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் அப்பா யாருப்பா... பாரதிராஜாவா? கே.எஸ்.ரவிக்குமாரா?... பாவம் நாமளே கன்பியூஸ் ஆகிட்டோம்!

சென்னை: வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு அம்மாவா நடிக்க ராதிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

வேல்ராஜ் -தனுஷ் கூட்டணியில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த கூட்டணியில் புதிய படமொன்று தயாராகி வருகிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமிஜாக்சன்-சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். வழக்கம்போல, இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

ராதிகாம்மா...

ராதிகாம்மா...

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷின் அம்மாவாக ராதிகா நடிக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பாரதிராஜா...?

பாரதிராஜா...?

தனுஷிற்கு அப்பாவாக பாரதிராஜா நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், அதற்கு தலையை அப்படியும் ஆட்டவில்லை, இப்படியும் ஆட்டவில்லை படக்குழு.

கே.எஸ்.ரவிக்குமார்...

கே.எஸ்.ரவிக்குமார்...

இந்நிலையில், தற்போது தனுஷிற்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தொடர்ந்து படக்குழு மவுனம் சாதித்து வருகிறது.

சமுத்திரக்கனி...

சமுத்திரக்கனி...

‘வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷுக்கு அப்பாவாக சமுத்திரகனி நடித்திருந்தார். அம்மாவாக சரண்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Radikaa seems to be striking the right balance between her small screen projects and films. After she has been roped in for a key role in Atlee's next with Vijay, the latest we hear is that, director Velraj has signed her on to play the role of Dhanush's mother in his next film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil