ஜெய்ப்பூரில் பரபரப்பான ஷூட்டிங்.. விஜய் சேதுபதியுடன் ராதிகா சரத்குமார் எடுத்த அசத்தல் செல்ஃபி!

By

சென்னை: ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை ராதிகா சரத்குமார், விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோவை வெளியிட்டுள்ளார்.

தமிழில், வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.

தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மித்தாலி ராஜ் பயோபிக்

மித்தாலி ராஜ் பயோபிக்

இந்தி சினிமாவுக்கு சென்ற டாப்ஸி, அங்கு நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, அவர் தப்பட் படத்தில் நடித்திருந்தார். இது ஹிட்டாகி இருந்தது. இப்போது ராஷ்மி ராக்கெட் உள்பட சில படங்களில் நடித்து வரும் அவர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக்கான, சபாஷ் மித்து உள்பட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

டைட்டில் வைக்கவில்லை

டைட்டில் வைக்கவில்லை

இதற்கிடையே, தமிழிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படம் அது. தீபக், இயக்குனர் ஏ.எல்.விஜய் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

இதன் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் தொடங்கி நடந்து வருகிறது. காமெடி படமான இதில் யோகிபாபு, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்பட பலர் நடிக்கிறனர். ஒரே கட்டமாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடிக்க உள்ளனர். இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடக்கும் இதன் ஷூட்டிங்கில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் இணைந்தார்.

Recommended Video

Jayam Ravi நடிகைக்கு நீடிக்கும் Jail வாழ்க்கை • Radhika dwivedi
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

கடந்த சில நாட்களுக்கு முன், டாப்ஸியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டிருந்த அவர், இப்போது அந்த படப்பிடிப்பில் எடுத்த, சில புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இருக்கிறார் ராதிகா சரத்குமார். ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாங்கள் பணியாற்றுகிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X