Thaai Kizhavi Day 2 Box Office: காமெடியோ காமெடி.. தாய் கிழவி இரண்டாவது நாள் வசூல் விபரம்!

சென்னை: அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் தாய் கிழவி. இந்த படத்தில் " கலையரசி" ராதிகா நடித்துள்ளார். மையக் கதாபாத்திரமான இவரது பவுனு தாயி கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக உருவாக்கியது மட்டும் இல்லாமல், அதற்கு ஏற்ற வகையில் ராதிகாவிடம் வேலையும் வாங்கி உள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.

தாய் கிழவி படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அதேபோல் டிரைலர் வெளியாக படம் தியேட்டர்களில் பட்டையைக் கிளப்ப போகிறது என்பது 100 சதவீதம் உறுதி ஆனது. படத்தை பார்த்த உலக நாயகன் கமல்ஹாசனோ, மொத்த படக்குழுவினரையும் பாராட்டினார். இது மட்டும் இல்லாமல், இயக்குநர் சிவக்குமார் முருகேசனின் இரண்டாவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சேயோன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

Radikaa Sarathkumar Thaai Kizhavi Day 2 Box Office Collection Details Which Cross 4 65 Crores

படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக ராதிகாவின் நடிப்பை பார்த்து பாராட்டி வருகிறார்கள். ராதிகா தனக்குள் இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டு எதற்காக ஒரு ஆவரேஜ் ஆர்ட்டிஸ்ட் போல இத்தனை ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தார் என்று அவர் மீது செல்லமாக கோபப்படும் ரசிகர்களையும் பார்க்க முடிகிறது.

வரவேற்பு: படம் முழுக்க நல்ல காமெடி, அதே நேரத்தில் பெண்கள் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் மிகவும் நேர்த்தியாக சொல்லி உள்ள படமாக உள்ளது என்று பலரும் பாராட்ட, ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வருகிறார்கள். இதனால் தியேட்டரில் கூட்டம் அள்ளுகிறது. முதல் நாளைக் காட்டிலும் இரண்டாவது நாள் படத்திற்கான வசூல் என்பது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

Radikaa Sarathkumar Thaai Kizhavi Day 2 Box Office Collection Details Which Cross 4 65 Crores
Photo Credit:

வசூல்: படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 2.65 கோடிகள் வசூலித்தது. அதேபோல் மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பால், படத்திற்கு இரண்டாவது நாளில் ரூபாய் 4.65 கோடிகள் வசூலாகி உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. படத்தின் வசூல் இனி வரும் நாட்களிலும் சூடு பிடிக்கும் என்பதால் படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X